Friday, February 13, 2015

சோலார் விமானம்

 உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானம்..................... 

சோலாரின் உபயோகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் உணர்ந்து வரும் வேளையில் பலர் அந்த டெக்னாலஜியை நம்புவதில்லை. அதெல்லாம் சரிவராது பா, அதுக்கு நல்ல வெயில் வேனும், சூரியன் நேராக‌ அடிக்கனும், ரொம்ப காஸ்ட்லி அப்படி இப்படின்னு சில கன்சர்வேட்டீஸ் இருக்கும் போது - ஒரு முழு சோலார் விமானத்தை வடிவமைத்து அதை டெஸ்ட் பிளைட்டை ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.
இந்த டெஸ்ட் பிளைட் ஏற்கனவே ஸ்பெயினில் இருந்து மொராக்கா நாடு வரை சோதனை செய்யபட்டு அடுத்து இப்போது அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலை(Coast to Coast) வரை பறக்க விடுகிறார்கள். மே 1ஆம் தேதி முதல் கலிஃபொர்னியா நகரத்தில் தொடங்கி ஒவ்வொரு நாளும் 7 முதல் 10 விமான தளத்தில் இறக்கி ஒவ்வொரு சிட்டிக்கும் விசிட் அடிக்க போகிறது. இது கடைசியா நியூயார்க் ஜூலை மாதம் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
இந்த விமானம் ஒரு துளி பெட்ரோல் கூட இல்லாமல் பகல் மற்றும் இரவும் பறக்கும் திறன் படைத்தது. இதில் ஆட்டோ பைலட் என்று அத்தனை கமர்ஷியல் விமானத்துக்குன்டான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்கிறது. அது போக இதில் இப்போது பைலட்டை தவிர வேறு எந்த ஒரு ஆளையும் கூட பறக்க அனுமதிக்கவில்லை. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் தான் என்றபோதிலும் இதன் வேகத்தை அதிகரிக்க முடியும் என இதனை வடிவமைத்த விஞ்சானிகள் கூறுகின்றனர்.

1610கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்

Chennai to Delhi in Just 1 Hour and 15 Minutes by Car? - Not joking - World's fastest car is getting ready, which can clock 1610 Kilometer per hour speed in just 42 seconds..........சென்னை டு டெல்லி - ஒன்னேகால் மணி நேர கார்பயணம்? - இது சாத்தியமா என்றால் - ஆம் தான் பதில். இந்த 2188 கிலோமீட்டரை அடைய தேவையான உலகத்தின் அதிவேக கார் தயாராகி கொண்டு இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 1610 கிலோமீட்டர் ஆனால் அதற்க்கு தேவையான நெடுஞ்சாலை இருந்தால் இது சாத்தியம். உலகின் அதிவேக கார் டிரைவரான பிளட் ஹூன்ட் தன் பிளாக்கில் இதை எழுதியிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த இவர் ஒருவரே இது வரை அதி வேக தரை கார் சாதனையாளர். இவர் தற்போது உலகின் அதிவேக கார் ரெடியாகிறது என்றூ அதன் சில படங்களை வெளியிட்டு இதை தானே 2015 ல் ஓட்ட போவதாய் தெரிவித்திருக்கிறார். இந்த காருக்கு யூரோஃபைட்டரின் டைஃபூன் எஞ்சின் ரகம் பொருத்தபடுகிறதாம். இந்த அதிவேக கார் பயணம் சவூத் ஆஃப்ரிக்காவில் நடக்க இருக்கிறது. ஆடி கியூ 7 இருந்தாலும் டாட்டா நானோ இருந்தாலும் என்ன பயன் இருக்கிற டிராஃபிக்கில 30 போகவே மூச்சு முட்டுது இதுல 1610 கிலோமீட்டர் வேகாமான்னு நீங்க சலிச்சிகிறது எனக்கு கேட்கும் - யெஸ் நான் உங்க மைன்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்..............இன்னொரு ஆச்சர்யம் இந்த 1610கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்.............

கிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம்



கிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம் உங்கள் கணனியில்

1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்றூ வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது. கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்தால் திறக்க வேண்டாம் . இது அனேகமாய் பேமென்ட் ரீஃபன்ட் / கொரியர் டெலிவிரி அட்டம்பன்ட் / லாட்டரி வின்னிங் அனவுன்ஸ்மென்ட் என்றே வரும். சில சமயம் உங்கள் நண்பர்கள் பிசி பாதிகப்ட்டிருந்தால் அதிலிருந்தும் வரலாம். கிரிப்டோ லாக்கர் ஒரு முறை உங்கள் பிசியில் புகுந்தால் என்ன செய்யும். இந்த படத்தில் இருப்பது போல் ஒரு ஸ்லைடு வந்து ஆக்ரமிக்கும். உங்கள் பிசியில் ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் தகவல் அனைத்தும் என்கிரிப்ட் செய்யபட்டு 300 டாலர் முதல் 300 யூரோ பவுன்டு வரை பினைத்தொகையாக கேட்பார்கள். இது உங்கள் பிசியின் விலை. அது போக கிரிப்டோ லாக்கர் அட்டாக் ஆன பிறகு டைம்பாம் கவுன்ட் டவுன் வரும் அதாவது அந்த 72 மணி நேரத்துக்குள் பணம் கொடுக்கலைனா அவ்வளவு தான் அத்தனை ஃபைலும் ஆட்டமேட்டிக்கா அழிஞ்சி போயிடும். எல்லா ஆன்டி வைரஸும் இதற்க்கு சொல்யூஷன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆளை கடத்தி பணம் கேட்டானுங்க இப்ப கணனியை கடத்தி பணம் கேக்குறாங்க டெக்னாலஜி இஸ் இம்ப்ரூவ்டு ஏ லாட். இதுல என்ன கொடுமைனா பணம் கட்டியும் பல வாரங்களாய் இன்னும் அவங்க பிஸி சரியாகலையாம்

எட்டு வடிவ நடை பயிற்சி..!




எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை..

“எட்டு வடிவ நடைப்பயிற்சி”.

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.
காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.
15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள்:

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.
70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.
முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

இதை எம் நண்பர் பரிசோதித்து பார்த்து கூறினார்.

நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்...

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??
கொத்தமல்லி கீரை-----------மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை------------ நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை---------- நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை------------- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை------------ பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி-----------இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: ---------இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:----------- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: -------பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: ----------நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை--------: இருமல் குணமாகும்
புதினா கீரை:------ மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை:------- சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.

மணத்தக்காளி கீரை

தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கீரை வகைகளில் ஒன்று. ஆசியா-ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட இது, சிறிய செடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகளைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். சிவப்பு, கருப்பு நிறங்களில் காணப்படும் இதன் பழங்களை நிலக் காய்ச்சலில் காய வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம்.
இனப்பெருக்கம்: விதைகளைக் கொண்டே இதை இனப்பெருக்கம் செய்ய முடியும்.வரலாற்றில்: பிரிட்டனில் நெடுங்காலமாக இது இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம இயற்கையாளர் பிளினி, டிஸ்கார்டிஸ் உள்ளிட்டோர் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அஜீரணம், இருமல், ஆஸ்துமா, வீக்கம், வயிற்றுப்புண், தோல் நோய்கள், காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த மணத்தக்காளி பயன்படுகிறது.இலைகளைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடுவதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை நீங்கும். இதற்குக் காரணம் அதில் உள்ள ஊட்டம், குடலுக்கு இதம் தரும் தன்மை, பசியை அதிகரிக்கும் தன்மையாலும்தான். தோல் நோய், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, கண் பார்வை, நீர் பிரிதல் போன்றவற்றுக்கும் மணத்தக்காளி உதவும்.
மணத்தக்காளி இலைகளைத் துளசி அல்லது எலுமிச்சைச் சாற்றுடன் அரைத்துப் பூச, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் குறையும். மணத்தக்காளிக் காயை அரைத்துப் பாலாடையுடன் கலந்து பூசினால் தேமல் மறையும்.

தொட்டாற்சிணுங்கி செடியின் மருத்துவகுணங்கள்

தொட்டாற்சிணுங்கி செடியின் மருத்துவகுணங்கள்:-
பல நோய்களுக்கு மருந்தாகும் இதனை மூலிகை என்பதே பொருத்தமாகும். இதன் தாவரப் பெயர் MIMOSA PUDICA. இது FABACEAE என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள் நமஸ்காரி, காமவர்த்தினி.
இதன ஆங்கிலப் பெயரே Touch me not என்பது. பொதுவாக எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடிய இது 5 அடி வரைப் படரும் தன்மையது. சுமார் 60 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும். ஆற்றோரங்களில் காணப்படும் இது மனிதர்கள் தொட்டாலோ, சிறு அதிர்வு ஏற்பட்டாலோ தன் இலைகளைச் உள்பக்கமாகச் சுருட்டிக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.
இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்து இருக்கும். மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இதன் பூக்கள் இருக்கும். இவை இலைகளின் ஊடாக மலர்ந்து காணப்படும். இதன் காய் சுமார் 25 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்.
மலர்கள் சூரியனைக் காதலிப்ப்து நாம் அறிந்தது. ஆனால் இந்த சிடுமூஞ்சிக்கும் சூரியனுக்கும் காதல் என்றால் ...ஆம இதன் இலைகள் மாலையில் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளுமாம். காலையில் ஆதவனைக் கண்டதும் அழகிய தன் இலைகளை விரித்துக் கொள்ளுமாம்.
சரி இந்தத் தொட்டாச்சிணுங்கியின் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம். தொட்டாற் சுருங்கி வேரை பஞ்சு போலத் தட்டி அதனை ஒரு மண்சட்டியில் போட்டு அத்துடன் நீரைச் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரைக் கொதிக்க வைத்து அந்த நீரை நாளொன்றுக்கு மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம்
குடித்து வந்தால் நீர்க்கடுப்பு போயே போய்விடும். இதன் இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தாலும் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை காணாமல் போய்விடும்.
இதன் வேரையும் இலையையும் சம அளவு எடுத்து காயவைத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக வைத்துக்கொண்டு நாள்தோறும் 10 முதல் 15 கிராம் பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு தொடர்பான நோய்கள் போய்விடும். இலைச்சாறை மூலப்புண்ணிலும் அதாவது ரணங்களில் தடவி வந்தால் புண் ஆறி விடும். ஆறாத ரணங்களும் ஆறி விடும்.
இதன் இலையை விழுதாக அரைத்து பற்றுப் போட்டு வர வாதம் தொடர்பான கைகால் மூட்டுகளின் வலி, வீக்கம் குணமாகும். இதன் இலைகளை வெந்நீருடன் போட்டு கொதிக்க வைத்து ஊற்றி குளித்து வந்தால் இடுப்பு, முதுகு வலியும் குணமாகும். இவற்றைக் குறிக்கும் பாடல் இதோ....
இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்களே...இதில் காந்த சக்தி இருக்கிறதாம். தொடுகின்ற போது இந்தக் காந்த சக்தி மனிதனின் உடலில் ஈர்க்கப்படும். தொடர்ந்து இதனைத் தொட்டு வந்தால் மனோ வசியம் ஏற்பட்டு
மனம் நினைத்ததைச் செய்து முடிக்க முடியுமாம். பிடித்தவர்களை வசியம் செய்யவும் முடியுமாம். இதன் இலையை நாள்தோறும் தொட்டு வர பாலுணர்வு உணர்ச்சியை மிகுவிக்கும். இதனாலேயே இது காமவர்த்தினி என்று அழைக்கப் படுகிறது.

உலகால் அறியபடாத ரகசியங்கள்

உலகால் அறியபடாத ரகசியங்கள்...1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள்
வயிற்றில் இருக்கும்.
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ,ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில்
மொழிபெயர்க்கப்பட்டது.
15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம்
சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள்வயிற்றில் இருக்கும்.8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ,ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில்மொழிபெயர்க்கப்பட்டது.15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம்சாப்பிடும்.16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

பிரமந்தண்டு செடியின் மருத்துவப்பயன்கள்

பிரமந்தண்டு செடியின் மருத்துவப்பயன்கள்;-
இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும்.
இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விடம் இறங்கும்.
சமூலச்சாறு 30 மி.லி. கொடுத்துக் கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விடம் தீரும் பேதியாகும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும்.
இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை குணமடையும். உள்ளங்கால்,கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.
பொன்னாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை, கரிசாலை போல கண் நோய்க்கு நல்ல குணமளிக்கும். பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும். இதன் இலையை ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண்வலி, சதை வளருதல், சிவத்தல், அரிப்பு, கூச்சம் ஆகியன குணமாகும்.
இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப் புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு விழும். வலி தீரும், செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.
இதன் சாம்பல் பொடி 1-2 கிராம் தேனில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும், இரு வேளை 48 நாள் சாப்பிட வேண்டும்.
50 மி.லி.பன்னீரில் ஒரு கிராம் இதன் சாம்பலைக் கரைத்து வடித்த தெளி நீரைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம். கண் எரிச்சல், வலி, சிவப்பு ஆகியவற்றிக்குச் சொட்டு மருந்தாகப் பயன் படுத்த குணமாகும்.
இச் சாம்பல் பொடியை 2 கிராம் அளவு பசு வெண்ணெயுடன் மத்தித்து காலை, மாலை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும். புளி, புகை, போகம், புலால் நீக்க வேண்டும்.
இலை சூரணம், விதைச் சூரணம் கலந்து 3 அரிசி எடை காலை, பாலை தேனில் கொள்ள க்ஷய இருமல், நுரையீரல், சளி இருமல் தீரும்.
இதன் வேரை அரைத்து 5 கிராம் அளவு 50 மி.லி. வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க மலக் குடல்புழு, கீரிப் பூச்சிகள் வெளியேறும்.
இதன் விதையைப் பொடித்து இலையில் சுருட்டிப் பீடி புகைப்பது போல் புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற்சொத்தை, பற்புழு ஆகியவை தீரும்.
50 கிராம் வேரை 200 மி.லி. நீருல் நன்றாகக் கொதிக்க வைத்து, வடித்து குடிநீராகக் குடித்து வர காச நோய், மேக நோய் குணமடையும். ‘ மூலத்தில் பிரமந்தண்டு வடவேரை வணங்கி பூணவே குழிசமாடி புகழ்ச்சியாய் கட்டிவிட தோன்றிதாமே... பேய் ஓடும்’ இது பாட்டு. இதன் வடபக்க வேரை வழிபாடு செய்து எடுத்து தாயத்தில் வைத்துக் கட்ட பேய், ஓடும்.

மகா சிவராத்திரி விரதம்

ஆன்மீக கட்டுரைகள் - மகா சிவராத்திரி விரதம்!



மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி வரலாறு

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

கடைபிடிக்க வேண்டிய விரதமுறை

மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் பற்றிப் பார்ப்போம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளை கோயில்களுக்கும் வழங்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.

சிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.

இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.

பொட்டுகடலை முறுக்கு - Fried Gram Dal Murukku...

பொட்டுகடலை முறுக்கு

தேவையான பொருட்கள்:-

பொட்டுகடலை மாவு ---1 கப்
கடலை மாவு -------------1 கப்
அரிசி மாவு ----------------1/2 கப்
மிளகாய் தூள் -------------3/4 டீஸ்பூன்
சீரகம்-----------------------1/2 டீஸ்பூன்
எள் ------------------------சிறிதளவு
ஓமம் ---------------------1/4 டீஸ்பூன் ( விருப்பபட்டால் )
வெண்ணெய் ------------11/2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு .
பொரித்தெடுப்பதர்க்கு தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:-

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸிங் பௌலில் போட்டு வெண்ணெயை உருக்கி அதில் ஊற்றி நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்து வைத்துள்ள முறுக்கு மாவை அச்சில் போட்டு முறுக்குகளாக பிழிந்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

நினைத்தவுடன் செய்து சாப்பிட கூடிய வாயில் போட்டாலே கரையும் இந்த பொட்டுகடலை முறுக்கை சூடான காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:- உப்பு, காரம் அனைத்தையும் அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ (அ) குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம்.

பாசிப்பருப்பு பக்கோடா - Green Gram Pakoda


பாசிப்பருப்பு பக்கோடா - Green Gram Pakoda

​பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்...


தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை இன்ச்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

* அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

* இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

* சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

Vegetable Cutlet Recipe

Vegetable Cutlet Recipe

Here is a delicious cutlet recipe.

Ingredients needed: 
Onion (finely chopped) - 1 nos
Ginger garlic paste - 1/2 tbsp
Chopped vegetables (carrots, cauliflower, beans, peas) - 1 1/2 cups
Potatoes - 1 nos
Green chilies (finely chopped) - 2
Red chilli powder - 1 tsp
Garam masala - 1/2 tsp
Maida / corn flour - 1 cup
Bread crumbs (powdered) - 1 cup
Oil for Frying
Salt to taste

Method:
  1. Boil all the vegetables and mash the potatoes alone.
  2. Heat oil in a pan add green chillies and fry the chopped onions until brown.
  3. Now add the ginger garlic paste and saute for a minutes.
  4. Fry chopped vegetables then add mashed potatoes.
  5. Add chilli powder, garam masala (sambar powder) and salt.
  6. Mix well and cook for few minutes, at last add coriander leaves.
  7. Add water to maida and make it as a paste.
  8. Make a lemon sized balls out of the vegetable mixture.
  9. Dip them in the paste and roll them in bread crumbs.
  10. Heat oil in a tawa and fry cutlets until both sides becomes brown.
  11. Serve the hot vegetable cutlets with Tomato sauce.

Andoid mobileல் antivirus உபயோகிப்பவரா நீங்கள்?

Andoid mobileல் antivirus
உபயோகிப்பவரா நீங்கள்? உங்களை பார்த்து நக்கலாக
சிரிக்கிறார் Andy Rubin
Android மொபைல்களில் anti virus install
செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில
சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம்
இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும்
சில பேர் (யாருக்கு தெரியும்
friends எல்லாரும் சொன்னாய்ங்க
அதுனாலதா போட்ருக்கேன் ஆனா இதுவரைக்கும
இது ஒரு virusa கூட புடுச்சதில்ல சாமி )
என்றும் கூறினார்கள்
ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில்
anti virus மென்பொருளை Install செய்திருக்க
மாட்டார்
நானும் அதைத்தான் கூறுகிறேன்
நமது போனிற்கு anti virus
தேவையே இல்லை சில பேர் கூறலாம் நான்
உபயோகிக்கும் anti virus மென்பொருள் சில
applicationஐ install செய்கையில் அதிலுள்ள
virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில்
இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட
அந்த சர்ச்சைக்குறிய applicationகளால்
நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது
android என்பது ஒரு secure செய்யப்பட்ட os
இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும்
அது தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்
ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம்
இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும்
கூறவில்லை android osஐ வடிவமைத்த
Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார்
சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன்
virusஆல்
தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என
யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ?
அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட
மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure
செய்யப்பட்டதை மீறிய ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க
முழுக்க சோதித்த பின்னரே
இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன்
anti virus install செய்வது anti
Theftற்காகவே தவிர அதனால் virusஐ
முழுமையாக நீக்க முடியாது இதை புரிய
வைக்க இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக
இருப்பதாக உணருபவர்கள்
இதனை உடனே uninstall செய்துவிடுங்கள்
வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்

நன்றி விண்டோஸ் forum

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?



செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?


செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.

மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.

தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.

இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

புதினா

Health benefits of peppermint (புதினா)

#Mint contains numerous plant derived chemical compounds that are known to have anti-oxidant, disease preventing and health promoting properties.

#This popular herb contains no cholesterol; but is rich in anti-oxidants and dietary fiber, which helps to control blood cholesterol and blood pressure levels.

#The herb parts contain many essential volatile oils like menthol, menthone, menthol acetate. These compounds effect on cold-sensitive receptors in the skin, mouth and throat, the property which is responsible for the well known cooling sensation that it provokes when inhaled, eaten, or applied to the skin.

#The essential oil, menthol, also has analgesic (pain-killer), local anesthetic and counter-irritant properties.

#Research studies have also been suggested that the compounds in the peppermint relaxes intestinal wall and sphincter smooth muscles through blocking calcium channel at cell receptor levels. This property of mint has been applied as an anti-spasmodic agent in the treatment of "irritable bowel syndrome" or IBS and other colic pain disorders.

#Peppermint-herb is an excellent source of minerals like potassium, calcium, iron, manganese and magnesium. Potassium in an important component of cell and body fluids that helps control heart rate and blood pressure. Manganese and copper are important co-factors for antioxidant enzyme superoxide-dismutase.

# It is also rich in many antioxidant vitamins including vitamin A, beta carotene, vitamin-C and vitamin E. The leaves of mint also contain many important B-complex vitamins like folates, riboflavin and pyridoxine (vitamin B-6); and the herb is also an excellent source of vitamin-K.

நெல்லிக்காய்

Health benefits of gooseberries (நெல்லிக்காய்)

# Gooseberries are low in calories; 100 g of fresh berries provide only 44 calories. As in blackcurrants, they too have significantly high amounts of phenolic phytochemicals especially flavones and anthocyanins. These compounds have been found to have numerous health-benefiting effects against cancer, aging, inflammation, and neurological diseases.

# They have moderately well in anti-oxidant values. At 3277 umol TE/100g, gooseberries have oxygen radical absorbance capacity (ORAC) value comparable to that of red currants (3387umol TE/100g).

#The berries are moderate source of vitamin-C. 100 g of fresh berries provide 27.7 mcg or 46% of daily-recommended intake values of vitamin C. Research studies have shown that consumption of fruits rich in vitamin C helps body develop immunity against infectious agents and help scavenge harmful oxygen free radicals from the body.

#They have small amounts of vitamin A. 100 g berries has 290 IU or 10 % of RDA of this vitamin. Vitamin A is required for maintaining integrity of mucus membranes and skin, and essential component of visual cycle. In addition, consumption of natural fruits rich in vitamins and flavonoid anti-oxidants has been found to protect from lung and oral cavity cancers.

# Fresh berries contain small amounts of essential vitamins such as pyridoxine (vitamin B-6), pantothenic acid (vitamin B5), folates, and thiamin (vitamin B-1). Some of these vitamins are essential in the sense that the body requires them for metabolism from external sources to replenish.

# Furthermore, gooseberries contain adequate levels of minerals such as copper, calcium, phosphorus, manganese, magnesium, and potassium.

# Indian gooseberries (amla) are exceptionally rich in vitamin C. However, their anti-oxidant properties come from other anti-oxidant compounds tannins (emblicanin, punigluconin, pedunculagin etc).

காதலை கண்கள் காட்டும் என்பார்கள்

காதலை கண்கள் காட்டும் என்பார்கள். காதலை மட்டுமல்ல, உடல்நலக் குறைவையும் கண்கள் தெளிவாகக் கூறிவிடும். 
அதனால்தான் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் நமது கண்களைப் பரிசோதிக்கின்றார். ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சினையாக இருக்கக்கூடும் என்று தெரிந்துகொள்வோம்...
மங்கலான பார்வை: பொதுவாக இந்தப் பிரச்சினை கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும். கணினியில் உள்ள பிக்சல்களின் அமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் இந்த நிலை ஏற்படலாம். இது மட்டுமல்லாமல், சிலருக்குக் கண்களில் இருந்து கண்ணீரும் வரும்.

கண்களில் ஈரப்பசை குறையும்போது எரிச்சல் ஏற்படும். அதிகம் மங்கலான பார்வை இருந்தால் அது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
சிவப்பு, எரிச்சல்: கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால் அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரங்களில் ஒவ்வாமை காரணமாகவும், கண்களுக்குப் போடும் மேக்-அப் செட்டின் வேதிப்பொருட்கள் மூலமாகவும் இந்நிலை ஏற்படும்.
கண்களுக்கான மருந்துகளை தேவையில்லாமல் கண்களில் பயன்படுத்தினாலும் எரிச்சல், சிவப்பு ஏற்படக் கூடும்.
வெளிர்நிற கண்கள்:கண்கள் வெளிறிப் போயிருந்தால் உடம்பில் ரத்த சோகை முற்றியுள்ளது என்று பொருள். அதாவது உடலில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் கண்கள் வெளிறிப் போயிருக்கின்றன. இந்த நிலையில் கண்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள்நிற கண்கள்: உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காதபோது கண்கள் இந்த நிறத்தை அடைகின்றன. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப் பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருள்.
வீக்கமான கண்கள்: கண்கள் வீக்கத்துடன் காணப்படுவது, உடல் குறைபாட்டைக் காட்டுகிறது. குறிப்பாக, தைராய்டு பாதிப்புகளில் ஒன்றான ஹைப்பர் தைராய்டு நிலையாக இருக்கலாம்.
ஆகவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சில நேரங்களில் எந்த விதக் காரணமும் இன்றியும் கண்கள் வீக்கமாகக் காணப்படலாம். எப்படியிருந்தாலும், கண்கள் வீக்கத்துடன் காணப்படுகின்றன என்று யாராவது கூறினாலோ, அப்படி உங்களுக்குத் தோன்றினாலே உடனே மருத்துவரை நாடுவதே நலம்.
வறட்சியான கண்கள்: கண்கள் வறண்டு காணப்படுவது, உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்துள்ளதைக் காட்டலாம். எனவே அம்மாதிரி வேளையில், ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். நிறையத் தண்ணீர் பருக வேண்டும்.

அன்னையின் அன்பு


தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்:
216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

சில முக்கியமான உணவுபொருட்களின் தமிழ்ப்பெயர்கள்



தமிழில் டீக்கு "தேநீர்", காபிக்கு "குளம்பி" என்றுபெரும்பாலோருக்குத் தெரியும்.

மற்ற "சில முக்கியமான உணவுபொருட்களின் தமிழ்ப்பெயர்கள்" அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு......

இனியவை இருநூறு

இனியவை இருநூறு 
அறத்தி வழி நில் 
அறிவை பெருக்கு
அரியன ஆற்று
அறிவியல் பார்வை கொள் 
அழகை வழிபடு 
அகந்தை அகற்று 
அறியாமை ஒரு நோய்
அன்பில் கரை 
அறிவே ஆயுதம் 
ஆற்றுவதரம்
ஆழ்துப்பயில்
ஆற்றலில் வெளிப்படு
ஆறியதை உண்ணேல்
இயற்க்கையைச்சுவை
இசைக்கு உருகு 
இனிப்பை குறை 
இனியமொழிகொள்
இல்லை என்னாதே
இழந்ததை எண்ணேல்
ஈந்திட முந்து 
ஈகைக்குஇருகை 
ஈந்ததை இயம்பேல் 
ஈயை ஒழி 
உயர்ந்த ஆசை கொள் 
உன்னை வழங்கு 
உலகோடினை 
உனையே நினையேல் 
உதவினோர்க்கு உதவு 
உரிமையைகாத்திடு
உண்மையால் வெல்
உயிர்கொன்று உண்ணேல் 
உடமை நல்லொழுக்கம் 
ஊர்நிரைசுற்றம்
எதிலும் துணிவுகொள் 
எவரையும் பகையேல்
எண்ணி செயல்படு
எளிமையில் மகிழ் 
ஏளனம் வேண்டாம் 
ஏழ்மையை அகற்று
ஐயத்தில் தெளி 
ஐ ம்புலன் ஆள் 
ஒன்றே தெய்வம்
ஒளியை நாடு 
ஒலியெழ சிரியேல்
ஓதியவழிநில் 
ஔவைதமிழ்பயில் 
கனவில் களியேல்
கற்க்குமுன் தேர்க
கற்றதை போற்று 


இனியவை இருநூறு 
பழனி , டாக்டர் .இளங்கம்பன் 
இலக்கிய கருவூலம் 
மதுரை இலக்கிய பேரவை

Schedule


உங்கள் பதிவுகளை மற்றவர்கள் திருடாமல் இருக்க...!!


உங்கள் பதிவுகளை மற்றவர்கள் திருடாமல் இருக்க...!!



FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம். அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.


இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட
image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க. தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.


பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட், காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.


image "3" உள்ள படத்தை பார்க்க. உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய,
https://www.dropbox.com/s/8mjxj7pzt2oshzw/Prevent.rar?dl=0

நகம் உடையாமல் பாதுகாக்க சில வழிமுறைகள்

நகம் உடையாமல் பாதுகாக்க சில வழிமுறைகள்

பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை.

விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில குறிப்புக்கள்.





  1. தரமான நகச்சாயங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நகச் சாயம் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.
  2. நகச் சாயம் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நகச்சாய ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
  3. தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
  4. தினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நகச் சாயம் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.
  5. ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.


பாதங்களை பராமரிப்பது எவ்வாறு?

பாதங்களை பராமரிப்பது எவ்வாறு?

பாதங்களைப் பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். அன்றாடப் பாதப் பராமரிப்பு பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக உங்கள் பாதங்களுக்கு பெடிகியூர் மற்றும் சரியான காலணி போன்றவை தேவைப்படுகிறது.

இதன் மூலம் பாதங்களில் ஏற்படும் சுளுக்குகள், பங்கல் இன்பெக்ஷன், கீழ்வாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக நீங்கள் கீழ்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்கள் பாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவரிடம் அடிக்கடி காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.


உங்கள் பாதங்களில் வெடிப்புகள் இருக்கின்றதா எனப் பாருங்கள். உங்கள் உள்ளங்காலினை ஒரு கண்ணாடியைப் பாவித்து வழமைக்கு மாறாக ஏதாவது கருப்பு புள்ளிகள் அல்லது வீக்கங்கள் தென்படுகிறாதா என்று கவனியுங்கள். கிருமிகள் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கவும் உங்கள் கால் நகங்களை பாதுகாப்பான சுத்தமான மற்றும் கூர்மையான நகம் வெட்டியைக் கொண்டு வெட்டுங்கள்.

பழைய செல்களை அகற்றி புது வளர்ச்சியை ஊக்குவிக்க ஸ்க்ரப் கொண்டு பாதங்களை மெருகூட்டுங்கள். புதுத் தோல் ஆரோக்கியமானது மட்டுமல்ல கையாள்வதற்கும் எளிதானது. உள்ளங்காலின் கடினத் தோல் பகுதியை ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்கள் வரையில் நீரில் வைத்திருந்து மிருதுவாக தேய்த்து இறந்த தோலை அகற்றுங்கள்.

குளித்த பின்னர் பாதங்களுக்கு லோஷன் தடவுங்கள். அது உங்கள் பாதத்தின் ஈரலிப்புத் தன்மையைப் பாதுகாக்கும். ளுpகு 30 கலந்த மொய்சரைசரினை கோடைகாலங்களில் பாவியுங்கள். இது அதிக வெப்பத்தினால் தோல் எரிவு ஏற்படுவதைத் தடுக்க உதவும். அமரும்போது பாதங்களை மேல்நோக்கி வைத்திருப்பதால் இரத்த சுழற்சி சீராகும். நடக்கும் போது ஷூக்களைப் பாவியுங்கள். இதன் மூலம் உங்கள் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

முழங்கைக்கு எந்த ஒரு பராமரிப்பும் கொடுத்ததில்லை

இதுவரை நீங்கள் உங்கள் முழங்கைக்கு எந்த ஒரு பராமரிப்பும் கொடுத்ததில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் கொண்டு அவ்வப்போது முழங்கைக்கு பராமரிப்பு கொடுங்கள். இதனால் விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்குவதுடன், அவ்விடமும் மென்மையாக இருக்கும். சரி, இப்போது கருமையாக இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க என்ன செய்வதென்று பார்ப்போமா…! 1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெள்ளையாகும். சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும். பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி, முழங்கை மென்மையாக இருக்கும். 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலநுது, முழுங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, காட்டன் கொண்டு துடைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முகத்தைப் பளபளப்பாக்க எப்படி கடலை மாவைப் பயன்படுத்துகிறோமோ, அதேப் போல் முழங்கையை பளபளப்பாக்கவும் கடலை மாவைப் பயன்படுத்தலாம். அதற்கு கடலை மாவை, தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், கடலை மாவை எலுமிச்சை சாற்றில் கலந்து பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை தேனுடன் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். மஞ்சளுக்கு சரும கருமையை போக்கும் சக்தி உள்ளது. எனவே மஞ்சள் தூளை, தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிது நீரால் முழங்கையை 2 நிமிடம் தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனாலும் நல்ல மாற்றம் தெரியும்.