Sunday, February 15, 2015

உங்களுக்கான டிப்ஸ்

கான்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்... உங்களுக்கான டிப்ஸ்

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களில் 85 சதவீதம் பேர் தாங்கள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மிகச்சரியாக கடைபிடிப்பதாக நினைக்கின்றனர். ஆனால் 2 சதவீதம் பேர் தான் இந்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனர் என்று சமீபத்திய ஆப்தோமெட்ரி அன்டு விஷன் சயின்ஸ் ஜர்னல் கூறுகிறது. தினந்தோறும் 2500க்கு ஒருவர் என்ற அளவில் லென்ஸ் சரியாக பராமரிக்காததால் நோய்த் ...தொற்றுக்கு ஆளாகின்றனர் என்றும் அது கூறுகிறது.

லென்ஸ் அணிவதால் பிரச்னை வராமல் இருக்க ஆறு வழிமுறைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.


1. லென்ஸ் அணிந்துகொண்டே தூங்க கூடாது.
2. குறித்த காலத்திற்குள் லென்சை மாற்றிக்கொள்ள வேண்டும்.
3. கைகளைக் கழுவாமல் லென்சை தொடக்கூடாது.
4. தினந்தோறும் பிரஷ் சொல்யூஷன் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே உங்கள் லென்ஸ் கேஸில் உள்ள சொல்யூஷனை பயன்படுத்தக்கூடாது.
5. லென்ஸை தண்ணீரில் போடக்கூடாது. அதில் உள்ள பாக்டீரியா, அமிபா லென்ஸில் ஒட்டிக்கொண்டு கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
6. லென்ஸ் கேஸை குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றிவிட வேண்டும்.

இதை பின்பற்றினாலே கண்ணில் தொற்றுவராமல், பிரச்னை வராமல் தடுக்கலாம்

முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல்


பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு, அவர்களில் பெரும்பாலானோர் முகப்பருவைத்தான் சொல்லியிருக்கிறார்கள். 

பருவ வயதில் மட்டும் ஏன் இந்த முகப்பரு தோன்றுகிறது என்றால், அந்த வயதில் மட்டும் தான் உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவு சுரக்கும். இவ்வாறு அதிகமாக சுரக்கும் எண்ணெய், முகங்களின் ரோமக்கால்களின் வழியாக வெளியேறும் போது அவை முழுமையாக வெளியேற வழியில்லாமல் தடைப்பட்டு முகப்பருவாக உருமாறுகிறது. 

இந்த பருக்களை நகத்தால் கீறினாலோ, அழுக்குத் துணியால் முகத்தை துடைத்தாலோ இன்பெக்ஷன் ஏற்பட்டு முகப்பரு கட்டிகள் ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவ பெயர் ‘அக்னே’ எனப்படும். இதை 4 கட்டங்களாக பிரிக்கிறார்கள். 

முதலில் புள்ளிகள் போல 4, 5 பருக்கள் முகத்தில் தோன்றுவது, முகப்பருவில் சீழ்பிடித்து கட்டி வரத் தொடங்குவது, அவை பெரிதாகி மிக கடினமாக மாறிவிடுவது, இவை மேலும் முற்றிவிட்ட நிலையில் எவ்வித கிசிக்சையும் எடுக்காமல், முகப்பருவை கிள்ளிக் கொண்டே இருந்தால் 4வது கட்டமாக முகத்தில் ஏராளமான நிரந்தர தழும்புகள் வந்துவிடும். 

முகப்பருக்கள் வராமல் தடுக்க எண்ணெய், வெண்ணெய், நெய், கொழுப்பு, இனிப்பு, காரம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. உணவில் அதிக அளவு காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகப்பரு வந்த பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினாலே போதும். 

ஒரு நாளைக்கு 4 முறை முகத்தை கழுவ வேண்டும். எந்த சோப்பையும் உபயோகிக்கலாம். ஆனால் அது ஒரே சோப்பாக தொடர்ந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு சோப்பிலும், ஒருவித கெமிக்கல் கலக்கப்பட்டு இருக்கும். 

நாம் சோப்பை அடிக்கடி மாற்றினால் முகத்தோல் அந்த கெமிக்கல் கலவைகளால் பாதிக்கப்படும். இவற்றை முறையாக செய்தாலே முகத்தில் பரு என்பதே தோன்றாது.

குறிப்புகள்

வழ வழ முகத்திற்க்கு


பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி, 30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்


முக வறட்சி நீங்க...

1 பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.

2. தக்காளி சாரு முகத்தில் தடவுலாம்

3. பாலை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்

தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்பு

எமது உடலில் தேமல் வந்தால் பார்ப்பதற்கு அழகில்லாமல் இருக்கும் ஆகவே தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.

தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள். நீங்களும் இவற்றைச் செய்து பார்த்தால் உங்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும்.


  1. இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
  2. எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.
  3. ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும்.
  4. மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
  5. ஒரு துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

இந்த மருத்துவக் குறிப்புக்களை செய்து கொண்டு வந்தால் உங்களுக்கு வந்த தேமல் மறைந்தே போய்விடும்.

தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்பு 2


வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.

கை, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். அழகு மேம்படும்.

வேற்றுக் கிரக வாசிகள்

வேற்றுக் கிரக வாசிகளை சாதாரண மக்களாலும் அடையாளம் காண முடியும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

எமது பூமிக்கு அப்பால் வேறு உலக வாசிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வானியல் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.

பூமியில் பலரும் இதனை கண்டதாகவும் நிரூபிக்கப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பூமியை நோக்கி வரும் வேற்றுக் கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் காணலாம் என்பது பற்றி வானியல் விஞ்ஞானிகள் இலகுவான வழிமுறை ஒன்றை கூறுகின்றனர்.

அதாவது வெளி உலகில் இருந்து வரும் போது அவர்களின் வாகனத்தின் ஒளி எமது கண்ணுக்கு தெரியும்.

செயற்கையாக வரும் ஒளியைக் கொண்டு இவை வெளி உலகில் வருபவர்களின் அடையாளம் என்பதனை தெரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.

தூரத்துக்கு ஏற்றவாறு பொருட்களின் ஒளி மாறுபடும். எனவே நிலையான ஒளியையும், செயற்கையாக வரும் ஒளியையும் இலகுவாக கண்டு கொள்ளலாம் என பௌதிக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

முகத்தில் வேர்க்குரு மற்றும் கருத்து போ போகாமல் இருக்க



வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..


நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.

இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள் .

சிறிக கண்களும் தற்போது எடுப்பதாகத் தோன்றும் .... 

கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.

இது உங்கள் கண்களை அழகாக்கும்!

WHY VISIT TEMPLES

WHY VISIT TEMPLES

The main idol is placed in the core center of the temple, known as
"Garbhagriha" or Moolasthanam. In fact, the temple structure is built
after the idol has been placed. This Moolasthanam is where earth's
magnetic waves are found to be maximum. We know that there are some
copper plates, inscribed with Vedic scripts, buried beneath the main
idol. What are they really? No, they are not God's/ priests' flash
cards when they forget the shlokas. The copper plate absorbs earth's
magnetic waves and radiates it to the surroundings.

Thus a person regularly visiting a temple and walking clockwise around
the main idol receives the beamed magnetic waves and his body absorbs
it. This is a very slow process and a regular visit will let him
absorb more of this positive energy. Scientifically, it is the
positive energy that we all require to have a healthy life.


Further, the Sanctum is closed on three sides. This increases the
effect of all energies. The lamp that is lit radiates heat energy and
also provides light inside the sanctum to the priests or poojaris
performing the pooja.

The ringing of the bells and the chanting of prayers takes a
worshipper into trance, thus not letting his mind waver. When done in
groups, this helps people forget personal problems for a while and
relieve their stress.

The fragrance from the flowers, the burning of camphor give out the
chemical energy further enhancing good aura. The effect of all these
energies is supplemented by the positive energy from the idol, the
copper plates and utensils in the Moolasthanam/ Garbagraham.

Theertham, the "holy" water used during the pooja to wash the idol is
not plain water cleaning the dust off an idol. It is a concoction of
Cardamom, Karpura (Benzoin), zaffron/ saffron, Tulsi (Holy Basil),
clove, etc . . . Washing the idol is to charge the water with the
magnetic radiations thus increasing its medicinal values. Three spoons
of this holy water is distributed to devotees. Again, this water is
mainly a source of magneto-therapy. Besides, the clove essence
protects one from tooth decay, the saffron & Tulsi leafs protects one
from common cold and cough, cardamom and Pachha Karpuram (benzoin),
act as mouth fresheners. It is proved that Theertham is a very good
blood purifier, as it is highly energized. Hence it is given as
prasadam to the devotees. This way, one can claim to remain healthy by
regularly visiting the Temples.

When people go to a temple for the Deepaaraadhana, and when the doors
open up, the positive energy gushes out onto the persons who are
there. The water that is sprinkled onto the assemblages passes on the
energy to all. This also explains why men are not allowed to wear
shirts at a few temples and women are requested to wear more ornaments
during temple visits. It is through these jewels (metal) that positive
energy is absorbed by the women. Also, it is a practice to leave newly
purchased jewels at an idol's feet and then wear them with the idol's
blessings.

Energy lost in a day's work is regained through a temple visit and one
is refreshed. The positive energy that is spread out in the entire
temple and especially around where the main idol is placed, are simply
absorbed by one's body and mind.

Our practices are NOT some hard and fast rules framed by one man and
his followers or God's words in somebody's dreams. All the rituals and
practices are, in reality, well researched, studied and scientifically
backed thesis which form the ways of nature to lead a good healthy
life.