Wednesday, February 25, 2015

மூலிகை மருந்துகள்

மூலிகை மருந்துகள் என்ற பெயரில் பதிவாகும் பல மருந்துகள், கற்பங்கள், தைலங்கள் என பெரும்பாலானவை மிக ஆபத்தான மருந்துகள் என்பதை கவனத்தில் வையுங்கள்.

நாட்டு மருந்து பக்க விளைவு அற்றது மூலிகைகளில் என்ன கேடு வரப்போகுது என்று விவாதம் பன்னும் அனைவரும் கவனமாக படியுங்கள்.

நவீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்தாலும் கிடைக்காத பல ஆயிரம் இரகசியங்களை சித்தர் முதல் ஞானிகள் நமக்கு பாடலாக தந்திருக்கிறார்கள். அவற்றில் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் கோடிக்கணக்கானது. அது போல் மருத்துவத்திலும் பல இரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது, உதாரணமாக மக்களுக்கு தீங்கு செய்பவர்கைகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய கற்ப மருந்தின் இரகசியம் தெரிந்துவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று நினைத்தே பல இரகசியங்களை பரிபாஷையாகவும் குருகுல முறையிலும் பாரம்பரிய முறையிலும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் மருந்துகளின் குணபாடம் கூறியவர்கள் அதன் நச்சுத் தன்மைகளையும் தனியே பாடி இருக்கிறார்கள், அதை மறைபுகமாகவும் பாரம்பரியமாகவும் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இன்று நாம் கானும் வலைதளங்களில் இருக்கிறது. கடைகளில் சித்தர் பாடல் புத்தகம் ஒன்றை வாங்கி அதில் இருக்கும் பாடலை பதிவிட்டால் அவரும் மருத்துவரே என்ற நிலை கானப்படுவது தான்.

இதை இப்படி செய்யுங்கள் அதை அப்படி உண்ணுங்கள் என்று தயக்கம் இன்றி பதிவிடும் தோழர்களே, தயவு செய்து உங்கள் பதிவில் இருப்பது மருந்து மட்டும் தானா அல்லது உயிரை மெதுவாக போக்கும் நஞ்சும் உண்டா என்பதை உணர்ந்து பதிவிடுங்கள்.

பக்க விளைவு என்பது அனைத்திலும் உண்டு, அது இயற்கையில் அதிகம் உண்டு. நாம் தினமும் உண்ணும் காய்கறிகள் முதல் மருந்தாகும் மூலிகைகள் வரை அது அதிகமாகவே இருக்கிறது.

அதை அதிகம் சாப்பிட்டால் வாதம் வரும், இதை சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும், இதை குடித்தால் கபம் வரும் என்று ஏன் கூறுகிறார்கள். இவை பக்கவிளைவுகள் இல்லையா!

”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று நம் முன்னோர்கள் தெளிவாக கூறியிருப்பது ஏன் என்று சிந்திப்பதில்லை நாம்.

தினம் நாம் சாப்பிடும் உணவில் இத்தனை கெடுதி இருப்பதால் தானே நோய்கள் வருகின்றன, அதுவே முறையற்ற மருந்துகளை உண்டால் என்ன விளைவு ஏற்படும் என சிந்திப்பதே இல்லை.

உடம்பு குறைய அதை உண்ணுங்கள் என்று பதிவில் இருக்கும் ஆனால் அதை உண்டால் இதய நோய் வரும் என்பது தெரியாது, இதை தான் பக்க விளைவு என்பது.

சரியான ஆலோசனைகள் இல்லாமல் கிடைக்கும் எந்த மருந்தாக இருந்தாலும் அதில் ஆபத்துக்கள் கானப்படும் என்பதை நினைவில் வையுங்கள்.

உதாரணமாக.

திரிகடுகம் அல்லது திரி கடுகு என கூறப்படும் ”சுக்கு, மிளகு, திப்பிலி” இந்த மூன்று சரக்குகளும் சரியான முறையில் சுத்தி செய்யாவிடில் நமது நுரையீரல் மெதுவாக பாதிப்படைந்து அதிக தூரம் நடக்கும் போது சிறு கலைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு ஓர் காரணமான தீய சக்தியாய் மாற்விடும்.

ஆனால் திரிகடுகம் என்பது உயிர் காக்கும் கற்ப மருந்து இதை முறைப்படி சுத்திசெய்து சூரணம் செய்து சூரணத்தை மீண்டும் சுத்தி செய்து நமது உடலின் தகுதிக்கு ஏற்ப குறிப்பிட்ட சேர்கை மருந்துடன் மண்டலம் உட்கொண்டால் பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு பக்டீரியாவும் நமது உடலை தாக்கது.

திரிகடுகம் சுத்தி செய்யும் முறையை கவனுயுங்கள், அதன் நச்சுத்தன்மையை நீங்களே உணர முடியும்.

சுக்கு

நன்றாக காய்ந்த சுக்காக தெரிவு செய்து அதன் மேல் தோலை நன்கு சுரண்டி போக்க வேண்டும் பின்னர் சுண்ணாம்பு தெளிவு நீரில் 1 1/2 மணி நேரம் ஊரப்போட்டு எடுத்து மீண்டும் சுத்த நீரில் அலம்பி எடுத்து காயவைக்கவும்.

மிளகு

சிறுதீயாக மண் ஓட்டில் போட்டு வாசனை கிளம்ப வருத்து எடுக்கவும்

திப்பிலி

சித்திரமூல கியாழத்தில் அதாவது கொடிவேலி வேர் பட்டை சாறு அல்லது அதன் கியாழம் செய்து அதில் 4 சாமம் ஊரப்போட்டு எடுத்து (12 மணி) நன்கு சுத்த நீரில் அலம்பி காயவைத்து எடுக்கவும்.

இதில் எவ்வளவு கெடுதியான விடயம் இருந்தால் இப்படி செய்ய வேண்டும் என கூறியிருப்பார்கள்.

ஆகவே சரியான ஓர் முறை தெரியாமல் வெருமனே கண்டதையும் கேட்டதையும் சாப்பிட்டு விட்டு வேறு பாதிப்புக்கள் ஏற்படும் போது என்ன என்று தெரியாமல் அவலப்படுவதை நிருத்துங்கள்.

சரியான பதிவாக இருந்தாலும் சரி அதை ஒருமுறைக்கு இருமுறை சரியானவர்களிடம் கேட்டுவிட்டு முயற்சி செய்யுங்கள்.

“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்

அப்பொருள் மெய்பொருள் கான்பதரிது”

சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்
தனியா – ஒரு கப்
கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – எட்டு
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து (தேவைப்பட்டால்)
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய வைத்து பருப்பு வகைகளை முதலில் சேர்த்து சிவக்க வறுக்கவும். பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களைச் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்தால் மணக்கும் சாம்பார் பொடி தயார். பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு மாதம் வரை வாசனையுடன் இருக்கும்

நான்ஸ்டிக் பாத்திரங்கள் நல்லதா? கெட்டதா?

இன்றும் பல வீடுகளில் 'என் அம்மா சமைச்சா... அத்தனை ருசியா இருக்கும்... வாசனை ஊரையே தூக்கும்’ என்று, மனைவி செய்த சமையலை ஒரு கவளம் வாயில் வைத்ததும், வார்த்தைகளை உதிர்க்கும் கணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறியது இன்று, குறைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.

மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

ஸ்வீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கைதான், உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது 'நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்பதுதான். நான்ஸ்டிக் பாத்திரங்களில், 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) எனப்படும் ஒரு வகை ரசாயனக் கலவை இருக்கிறது. சமைக்கும்போது உணவில் கலக்கும் இந்த ரசாயனம், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இது கணையத்தின் செயல்பாட்டைப் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறது, இந்த ஆராய்ச்சி முடிவு.

இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த 'மோனிக்கா லின்ட்’ இது குறித்துக் கூறுகையில், 'நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகுளோரினேட்டட் பைபீனைல்ஸ், டயாக்சின்ஸ், பிஸ்பினால் ஏ போன்றவை, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதேபோல, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’கள் நம் உடலில் உள்ளதா என்பதை ஆராய்ந்தோம். ஏனெனில், நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த ரசாயனம் உள்ளது. இது உணவில் கலந்து நம்முடைய உடலில் சென்று சேர்கிறதா என்பதை கண்டறிவதன்மூலம் இந்த பொருட்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

ஆய்வில் பெரும்பாலானவர்களுக்கு, பர்ஃப்ளூரினேட்டட் அமிலம் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தோம். இது கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இன்சுலின் சுரப்பைப் பாதிக்கிறது. இந்த ரசாயனம் கணையத்தை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வைப் பற்றி சர்க்கரை நோய் நிபுணர், கருணாநிதியிடம் கேட்கையில், 'இதைப் படித்துவிட்டு சர்க்கரை நோய் வருவதற்கு, நான்ஸ்டிக் பாத்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சர்க்கரை நோய்க்கு மூலகாரணங்கள் மூன்று. அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி மற்றும் மரபணு. இதைத் தவிர இதர காரணங்கள் பல உண்டு. அதில் இந்த பர்ஃப்ளூரினேடட் ரசாயனக் கலவை முதன்மையான காரணமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். நச்சுத் தன்மையுடைய இந்த ரசாயனக் கலவை, கணையத்தை நேரடியாகப் பாதித்து, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் வெளியேறுகிறது. இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தத்தில் சேர்வதனால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே மக்கள் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோயைத் தவிர்த்துவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. 'ஜங்க் ஃபுட்’ உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு அதிக நார்ச் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்' என்றார்.

'உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உணவில் சுவையும், சத்தும் அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மை.’ என்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கண்மணி.

'மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. பாத்திரம் என்ற வரிசையில்கூட அது வராதது வருத்தத்தை அளிக்கிறது.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை. எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும். ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே'

பயன்தரும் மூலிகை

மூலிகையின் பெயர் -: மூக்கிரட்டை.

தாவரப்பெயர் :- BOERHAAVIA DIFFUSA.

தாவரக்குடும்பம் ;- NYCTAGINACEAE..

வேறு பெயர்கள்-மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை முதலியன.

பயன்தரும் பாகங்கள் :- இலை, தண்டு, வேர் விதை முதலியன.

வளரியல்பு :- மூக்கிரட்டை தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. இலைகள் மேல்புரம் பச்சையாகவும் கீழ்புரம் வெழுத்து சாம்பல் நிறத்திலும் நீழ்வட்டமாக எதிர் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. சாலையோரங்களிலும், வாய்கால் போன்ற இடங்களிலும் காணப்படும் கழைக்கொடி.. சிறிது வேர் இருந்தாலே ஈரம் பட்டவுடம் தளைத்துவிடும். இதன் தாயகம் இந்தியா பின் பசிபிக்கிலும், தென் அமரிக்காவிலும் பரவிற்று. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக்காய்க்கும். விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- ஒரு பிடி வேரும், 4 மிழகும் 100 மி.லி.விளக் கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டடு வடிகட்டி வைத்ததுக் கொண்டு
6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி.
அதற்கு மேல் 30 மி.லி. வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி,செரியாமை ஆகியவைத் தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.

ஒரு பிடி வேர், மிளகு 4, உந்தாமணிச்சாறு 50 மி.ல்லி. ஆகியவற்றை100 மி.லி. விளகெகெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல் வருதல் குணமாகும்.

ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணரல் தீரும்.

வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநல்லி ஒரு பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்கட்டு, மகோந்தரம் தீரும்.

இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்

இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமிம் உண்டாகும்.
இதன் இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெய்யிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை காரம், மீன், கருவாடு, ஆகியவை.

மூக்கிரட்டைப் பட்டை வேர்-20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை-20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்-20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி. தண்ணீரில் ஊரவைக்கவேண்டும். 50 மி.லி. வரும் வரை கொதிக்கவைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இத்துடன் 60 மி.லி. கிராம் நண்டுக்கல் பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3 மாதங்களில் முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும்.

நமஸ்காரம் எவ்வாறு செய்ய வேண்டும் ?

நமஸ்காரம் என்பது பணிவன்புடன் மரியாதை கலந்து தேவர்களையும் பெரியோர்களையும் வணங்கும் முறையாகும்.

இது தண்டாக்ருதியாய் விழுந்து நமஸ்கரித்தலும், நின்றபடியும் இருந்தபடியும் நமஸ்கரித்தலுமான இரு வகைப்படும்.

விழுந்து நமஸ்கரித்தலிலும் இரு வகைப்படும்.

அவை அஷ்டாங்க நமஸ்காரமும் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆகும்.

இவற்றுள் அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புஜங்களிரண்டு என்னும் எட்டு அவயங்களும் நிலத்தில் பொருந்தும் படியாக விழுந்து நமஸ்கரிப்பதாகும்.

இது பூமியில் சிரத்தை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச்செய்வது.

இவ்வகை நமஸ்காரம் ஆண்களுக்குரிய தாகும்.

பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அவயங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்.

பெண்கள் இவ்வகை நமஸ்காரம் செய்வதற்கு உரியர்.

பெண்கள், மார்பு பூமியில் படாமல் வணக்கம் செய்ய வேண்டும்.

எனவே அங்கப்பிரதட்சணம் பெண்கள் செய்யக்கூடாது என்பது மரபு.

தலை மட்டுமே குனிந்து வணங்கல் ஏகாந்த நமஸ்கராம் எனப்படும்.

தலைக்கு மேல் இரு கரங்கூப்பி வணங்குவது திரியங்க நமஸ்காரம் எனப்படும்.

நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வீழ்ந்து வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

இதை தண்டனிடுதல் என்பர்.
அல்லது தண்டம் சமர்ப்பித்தல் என்பர்.

தண்டம் என்பது கழி அல்லது கோல்.

கையில் பிடித்துள்ள ஒரு கோலை விட்டு விட்டால் அது கீழே விழுந்து விடும்.

நமஸ்காரம் செய்வதை தண்டம் போல் செய்ய வேண்டுமென்று சொல்வது வழக்கம்.

நம் சரீரம் வெறும் மரக்கோல்தான்.

உதவாத பொருளை, அது தண்டமாகி விட்டது என்கிறோம்.

அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம்.

இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும்.

இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்து விட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கி விட்டு அதற்கு அடையாளமாக ஈஸ்வரன் முன் இந்தச் சரீரத்தை கீழே போட வேண்டும்.

இதுதான் தண்டம் சமர்ப்பித்தல் என்கிறார் ஜகத்குருஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள்.

இந்த நமஸ்காரம் தாய், தந்தை, குரு, தேவர், பெரியோர், மூத்தோர் முதலியவர்களுக்கு உரியதாகும்.

தவத்தாலும் வயதாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்கள் நித்தியம் நமஸ்கரித்தக்கவர்கள்.

எந்த குருவானவர் வேத சாஸ்திர உபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கத் தக்கவரோ அவரை நித்தியம் நமஸ்கரிக்க வேண்டும்.

கெட்ட மரியாதையுள்ளவனையும், நன்றி மறந்தவனையும், கள்வனையும், வஞ்சகனையும், பித்தனையும்,
மூர்க்கனையும், சூதாடுபவனையும், தன்னிச்சையாக நடந்துகொண்டிருப்பவனையும், அசுசியானவனையும், எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவனையும், ஜெபம் செய்து கொண்டிருப்பவனையும், வேத பாஷ்யனையும், காரூட வித்தைக்காரனையும், சோதிடங் கூறிப் பிழைப்பவனையும், பாதகனையும், அது போலவே புருஷனைக் கொன்ற பூவையையும், ரஜஸ்வலையானவளையும், விபச்சாரம் செய்பவளையும், பிரசவித்தவளையும், அதிகக் கோபக்காரனையும் எக்காரணம் கொண்டும் நமஸ்கரிக்கக் கூடாது.

சபையிலும், யாக சாலையிலும், தேவாலயத்திலும், புண்ணிய ÷க்ஷத்திரத்திலும், புண்ணிய நதி தீர்த்தத்தில் நீராடுபவனையும், வேதத்யயன காலத்திலும் பிரத்தியேகமான நமஸ்காரம் செய்வது பூர்வத்தில் செய்த புண்ணியத்தைப் போக்கும்.

சிரார்த்தம், தானம், தேவ தர்ச்சனம், யக்ஞம், தர்ப்பணம் செய்பவனையும் நமஸ்கரிக்கக் கூடாது.

ஆலயத்தில் பலி பீடத்திற்குப் பின்னுள்ள கொடிக் கம்பத்தின் முன்புதான் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

ஆலயத்தின் உள்ளே எந்தச் சன்னதிகளின் முன்பும் நமஸ்காரம் செய்யக் கூடாது.

பலிபீடம் இறைவனின் மாயா சக்கரம்.

நாம் பிறப்பு இறப்பு என்னும் மாயா சக்கரமான பலி பீடத்தில் மும்முறை வணங்குவதும், அதை உட்படுத்தி வலம் வருவதும் ஸ்தூல சூட்சும காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக என்று வேண்டுவதைக் குறிப்பதாகும்.

கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்தும், தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலை வைத்தும் விழுந்தும் நமஸ்கரிக்க வேண்டும்.

தான் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சன்னதியும் இருத்தல் கூடாது.

கொடி மரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எத் தெய்வச் சன்னதியும் இருக்காது.

எனவேதான் கோயிலில் இங்கு மட்டும்தான் விழுந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்.

நமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும்.

அதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் !

சளித்தொல்லையிலிருந்து விடுபட எளிய வைத்தியம்

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள்.
நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர்
மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள்.
நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து விடும் அளவுக்கு அப்பொழுது எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) யை புளிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும் அப்படி குடித்து விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும்.
ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல தேவையே இல்லை.
இந்த பதிவை படித்துவிட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறலாம்.

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?
செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.
மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.
இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:
1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.