Monday, February 16, 2015

அழகு குறிப்புகள் 2

1) கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

2) சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

3)  எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான். ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

4) உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

5) கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

அழகு குறிப்புகள் 1

1)  வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.

2) முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

3) ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள். எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

4) கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

5) தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய எளிமையான அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ்

வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும். 

சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும்.சிறிது பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.

சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும். அதனால் கொஞ்சமாக அரைத்து வைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே ஃபிரஷ்ஷாக இருக்கும்.

ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!

குப்புற தூங்குவது
தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்.


தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்.


மாய்ச்சுரைசரை தவிர்ப்பது
மேலும் ஆண்கள் மாய்ச்சுரைசரை பயன்படுத்தாமல் இருப்பார்கள். ஏனெனில் அதைப் பயன்படுத்துவதை சிலர் விரும்பமாட்டார்கள். விருப்பமில்லை என்பதற்காக அதை தவிர்த்தால், பின் சருமம் மென்மையிழந்து, வறட்சியடைந்துவிடும். எனவே தினமும் படுக்கும் முன்னும், குளித்தப் பின்னரும் மாய்ச்சுரைசரை தடவுவது நல்லது.


சோப்பு
ஆண்கள் அழகுப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு சோப்பை மட்டுமே பயன்படுத்துவர். இவ்வாறு எப்போதும் சோப்பை பயன்படுத்தினால், சருமம் வறட்சியடைந்துவிடுவதோடு, நாளடைவில் சுருக்கங்களும் வந்துவிடும். ஆகவே சோப்பைத் தவிர்த்து, ஆண்களுக்கென்று கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ்ஷை வாங்கி, பயன்படுத்துவது நல்லது.


புகைப்பிடித்தல்
அனைவருக்குமே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நன்கு தெரியும். அதிலும் இவற்றை பிடிப்பதால், புற்றுநோய் வரும் என்பதும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சிகரெட்டை அதிகம் பிடிப்பதால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, அழகும் தான் பாதிக்கப்படும். அதாவது சருமத்தில் கோடுகள் மற்றும் வாயைச் சுற்றிலும் சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே அழகாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், இவற்றை தவிர்ப்பது நல்லது.


மொபைல்
மொபைலானது வீட்டில் இருக்கும் டாய்லெட்டை விட மிகவும் அசுத்தமானது. ஏனெனில் அந்த மொபைலை பாக்டீரியாவின் இருப்பிடம் என்று சொல்லலாம். அந்த அளவு அவற்றை பல இடங்களில் வைப்பதோடு, நிறைய பேரின் கைகளுக்கு சென்று, எண்ணற்ற பாக்டீரியாவை அதில் வைத்திருக்கும். அத்தகைய பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ள மொபைலை காதுகளில் வைத்து பேசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வந்து, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல தொற்றுநோய்களை சருமத்தில் வரவழைக்கின்றன. ஆகவே மொபைலை எப்போதும் கண்ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.


பொடுகு
ஆண்கள் பல இடங்களுக்கு சுற்றுவதால், தலையில் பொடுகு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு வரும் பொடுகு அரிப்பை மட்டும் உண்டாக்குவதில்லை. சருமத்தையும் பாதிக்கிறது. அதுவும் எப்படியெனில், தலை அரிக்கும் போது கைகளை தலையில் வைக்கிறோம், பின் அதேக் கைகளை முகத்திலும் வைக்கிறோம். இதனால் பல சருமப் பிரச்சனைகள் வருகின்றன. ஆகவே நல்ல ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை பயன்படுத்தி, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


சூரியஒளி
ஆண்கள் ஒரு புல்லட் ப்ரூஃப் இல்லை. எப்படி பெண்களின் மீது சூரிய கதிர்கள் பட்டால் பிரச்சனைகள் வருகிறதோ. அதேப் போல் ஆண்களின் மீது பட்டாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அளவுக்கு அதிகமாக வெளியே சுற்றுவது ஆண்கள் தான். அவ்வாறு சுற்றும் போது அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதால், சரும புற்றுநோய்கள் வருவதோடு, பல தொற்றுநோய்களும் வரும். ஆகவே எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது, அரை மணிநேரத்திற்கு முன்னரே சன் ஸ்கிரீன் லோசனை தடவி, பின்னர் செல்ல வேண்டும். இதனால் சருமமானது பாதுகாக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

முடி அடர்த்தியாக வளர

முடி அடர்த்தியாக வளர
பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்...
1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். 8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். 9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

வெள்ளையான பற்கள் வேண்டுமா

பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால் வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மட்டும் தான் பற்கள் வெள்ளையாகுமா என்ன?
இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது. ஒன்று டூத் பிரஸ்-ஆல் அல்லது விரலால் பற்களை துலக்குவது. மற்றொன்று, இப்போது எங்காவது வெளியூருக்குச் செல்லும் போது சில சமயம் பிரஸை மறந்து விடுவோம். அப்போது ஒரு சில உணவுகளை உண்டாலே பற்களானது சுத்தமாகிவிடும். அது என்னென்ன உணவுகள் என்று படித்துப் பாருங்கள்...
ஸ்ட்ராபெர்ரி: இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு டூத் பேஸ்ட். இதில் சிட்ரஸ் ஆசிட் இருக்கிறது. இதனால் இதை உண்பதால் பற்களானது சுத்தமாவதோடு, வெள்ளையாகவும் ஆகும். வேண்டுமென்றால் தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால், பற்களானது சுத்தமாகும். பற்கள் வெள்ளையாக வேண்டுமென்றால், ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அத்துடன் பேக்கிங் சோடாவை சேர்த்து, பின் துலக்க வேண்டும்.
ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆன்ஸிடன்ட் பாக்டீரியாவை அழித்து, வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, பற்களை வெள்ளையாக்குகிறது. ஆகவே தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.
எலுமிச்சை: எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், இது பற்களுக்கு மிகவும் சிறந்த ஒன்று. ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால், பற்களானது சுத்தமாகவும், பாக்டீரியாவை அழித்து, ஈறுகளை வலுவாக்கும். வேண்டுமென்றால் எலுமிச்சையுடன் சிறிது உப்பை தொட்டு தினமும், பல் துலக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் துலக்கி வந்தால், பற்கள் வலுவடைந்து, வெள்ளையாகும்.
சீஸ்: சீஸ் கூட ஒரு வகையான டூத் பேஸ்ட். எப்போது சீஸை உண்டாலும் வாயில் எச்சிலானது ஊற்றும். சொல்லப்போனால், உண்மையில் சீஸ் ஆனது எச்சிலை அதிகமாக சுரக்கும். அப்படி எச்சில் சுரந்தால் பற்களானது சுத்தமாவதுடன், வாயில் துர்நாற்றத்தை குறைத்து, கிருமிகளையும் அழிக்கும்.
ஆகவே இத்தகைய உணவுகளை உண்டு, பற்களை வெள்ளையாகவும், வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.

தாங்க முடியாத பொடுகுத் தொல்லையா


எனக்குத் தலையில் பொடுகு உள்ளது. இதை seborrheic dermatitis என்று சொல்கிறார்கள். இதற்குத் தீர்வு என்ன?
ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயைத் தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம், காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள்.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.
இந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.
பார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாவதை நான் பார்த்திருக்கிறேன். கவனமாக இருந்து மனஅழுத்தத்தை குறைத்தால் இது மாறிவிடும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
இதற்கு ஏலாதி தைலம், வெட்பாலை தைலம், ஊமத்தையிலை தைலம் ஆகியவற்றைத் தேய்ப்பது சிறந்தது. இவை அல்லாமல் கீழ்க்கண்ட கைமுறைகளைப் பயன்படுத்திப் பொடுகு தொல்லையை மாற்றலாம்.
# வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். .....

பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா? இதைப் படிங்க!


மென்மையான கைகள் வேண்டும் என்பதுதான் பலரது விருப்பம். பட்டுப்போன்ற கைகளுக்காக பலவித கிரீம்களை வாங்கி உபயோகிக்க வேண்டாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே மென்மையான கைகளை உபயோகிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.


கைகள் சொரசொரப்பாக இருந்தால் பார்க்கவே சகிக்காது. அதுவும் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, என கைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் கைகளில் செல்கள் இறந்துவிடும். இதுவே சொறசொறப்பை தரும். கைகளை வெதுவெதுப்பான நீரில் நன்றாக ஊறவைத்து ஸ்க்ரப் செய்தால் போதும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
கைகளின் மென்மைக்கு தேன், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவைகளை உபயோகிக்கலாம். பால் கைகளின் மென்மைக்கும் பளபளப்புக்கும் ஏற்றது. பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் கைகளை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கைகள் மென்மையாகும்.
எலுமிச்சை தோலினை நன்றாக கைகளின் மீது தேய்க்க சொறசொறப்பு நீங்கி சருமம் மென்மையாகும். அதேபோல் கடல் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளில் தேய்க்க கைகளில் கருமை நிறம் இருந்தால் மாறிவிடும். கைகளின் தோல்கள் மென்மையாகும்.
சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், புதினா ஆயில் ஆகியவற்றுடன் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் கைகள் பளபளப்பாவதோடு தோல்கள் மென்மையாகும்.
ஒரு அகன்ற கிண்ணத்தில் வெதுப்பான நீரை ஊற்றி ரோஸ்மேரி ஆயில், ரோஜா இதழ்கள், சில துளிகள் ஆலிவ் ஆயில் போன்றவைகளை ஊற்றி கைகளை ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் மென்மையான துண்டினால் கைகளை கழுவ வேண்டும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அதனுடன் 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் தேன் கலந்து நன்கு கைகளில் பூசவும். பின்னர் 5 அல்லது 10 நிமிடங்கள் ஊறவைத்து கைகளை குளிர்ந்த நீரில் கழுவவும்.
கைகளை மென்மையாக மசாஜ் சிறந்த முறையாகும். தேங்காய் எண்ணெய், சிறிதளவு பாதம் எண்ணெய், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவைகளை கலந்து மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் கைகள் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

மசாஜ் செய்வதனால் ஏற்படும் நன்மைகள்


இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். பழங்காலத்தில் இருந்தே மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது.

இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மசாஜ் நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு நலம் பயக்கிறது.

தோல்:
மசாஜ் செய்வதால் தோலில் ஏற்படும் நன்மைகள் இணையற்றது. மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும்.

தசைகள்:
மசாஜ் தசைகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில் லாக்டிக் ஆசிட் சேரும். மசாஜ் தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட்களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.

ரத்த ஓட்டம்:
மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும்.

ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்பு:
நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன், அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் மசாஜ் நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம்:
வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

சிறுநீர் மண்டலம்:
மசாஜ் செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.

இதயம்:
முறையாக செய்யப்படும் மசாஜ் இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. பொதுவாக மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்.

ஆனால் உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:

1. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.
2. கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
3. வயிற்றுப்போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறுகுடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சினை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
4. தோல் வியாதிகள் உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகை


மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகை

மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். அதிலும் முகத்தை அழகுப்படுத்தவும், பொலிவுடன் வைக்கவும், பெண்கள் கடைகளில் விற்கும் பல செயற்கை முறையில் தயாரித்த பொருட்களை வாங்கி, முகத்தை மென்மைப் படுத்துகின்றனர். எதை பயன்படுத்தி முகத்தை மென்மை பயன்படுத்தினாலும், இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் வராமல் இருக்கும். அவ்வாறு முகத்தை பொலிவாக்க செயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க ஒரு சில மூலிகைகள் இருக்கின்றன. இந்த மூலிகைகள் முகத்தை அழகுறச் செய்வதோடு பொலிவாக்கவும் செய்கின்றன. அது என்னனென்னவென்று சற்று படித்துப் பாருங்களேன்...

மென்மையான சருமத்தை பெற...

கற்றாழை :கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென்மையையும், பொலிவையும் தரும் குணமுடையது. இதற்கு முதலில் அந்த கற்றாழையில் ஜெல்லை முகத்திற்கு தினமும் தேய்த்து 3-4 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகமானது மென்மையை அடையும். மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் நீக்கும்.

சீமைத்துத்தி :இந்த மூலிகைச் செடியை அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்துவதை காணலாம். இந்த சீமைத்துத்தி இலையை நன்கு அரைத்து முகத்தில் தடவி, கழுவ வேண்டும். மேலும் இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்திற்கு பிரகாசத்தை தருகிறது. வேண்டுமென்றால் இந்த பேஸ்டில் சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, முகத்திற்கு, கழுத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை தடவினால், முகம் பொலிவு பெறும்.

லாவெண்டர் :இது மற்றொரு மூலிகைச் செடி. முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனை வைத்து சோப்பு, கிரீம் என்று பலவற்றை தயாரித்துள்ளனர். ஏனெனில் இதில் சருமத்திற்கு மென்மையைத் தரும் குணம் அதிகம் இருக்கிறது. வேண்டுமென்றால் லாவெண்டரை எடுத்து அரைத்து, அத்துடன் ஏதேனும் ஆலிவ் அல்லது பாதம் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி கழுவ வேண்டும். இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். லாவெண்டர் ஆனது அனைத்து சருமத்திற்கும் பொருந்தாது. ஆகவே இதனை செய்யும் முன், அந்த கலவையை சிறு பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தில் சிவப்பு நிறம் அல்லது புண் என்று எதுவும் நேராமல் இருந்தால் முகத்திற்கு பின் தடவலாம்.

மேற்கூரியவாறெல்லாம் செய்தால் முகமானது பொலிவுடன் பிரகாசமாக மின்னும். மேலும் மேலே சொன்ன பொருட்கள் அனைத்துமே கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை.

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்



முகம் கழுவது எப்படி:

தேவைப்படும் நேரம்:
30 நிமிடங்கள் தான்.

தேவையான பொருட்கள்:

1. தண்ணீர் – 2கப்
2. காட்டன் டவல் சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]
3. கண்ணாடி சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]
4. சீப்பு முடிந்தவரை சொந்தமாக சீப்பு வைத்துக் கொள்வது நல்லது,சகோதரிகளிடமிருந்து வேண்டாம்

[முகம் கழுவிய உடனே தலை சீவினால் அழகாக தெரிவீர்கள்]

5. சோப்பு தவிர்க்கவும், உடலுக்கு தான் சோப்பு, முகத்துக்கென்று தனியாக பசைகள் உள்ளன OLay Clarity.

கவனிக்க வேண்டியவை:

ஆண்களின் அழகு குறிப்புகளை சில வாரங்கள் தொடந்தவுடன், உங்கள் தோற்றமும், முகமும் மிக மிக பிராகசாம தோன்றும்,
இதனால் உங்களுக்கு பல எதிரிகள் தோன்ற வாய்ப்புண்டு… கொஞ்சம் உஷார் தேவை.

1. தண்ணீர், டவலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்று சரி பார்த்துக்
கொள்ளவும் [மஞ்சள் தூள், மிளகாள் தூள் கலக்க வாய்ப்புள்ளது.]

2. கண்ணாடி, கீரல் இல்லாத நல்ல கண்ணாடியா என்று சரிபார்த்துக் கொள்ளவும், பிறகு என்னை குறை சொல்ல வேண்டாம்.

3. சீப்பு, பெரும்பாலும் உங்கள் சகோதரி, மனைவியின் சீப்பில் சில் பற்கள் இல்லாமல் இருக்கும், அது உங்கள் முடியை சேதப்படுத்த வாய்புண்டு..

உங்களுக்காக புதிய சீப்பு வாங்குவது நல்லது.

செய்முறை:

அ. 2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
ஆ. முகம் கழுவும் பசையை உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்,
இ. நுரை நிறைய வந்தவுடன், நெற்றி, வலது கன்னம், இடது கன்னம், இமை தாடை, கழுத்து ஆகியவற்றில் பூசவும்,
ஈ. விரலினால் மெதுவாக Massage செய்யவும்.
உ. 2 நிமிடங்கள் கழித்து, 1கப் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக நுரை நீங்கும் வரை கழுவவும்,
ஊ. மற்றொரு கப் தண்ணீரில் மருபடியும் கழுவவும்.
எ. இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும்.
ஏ. சீப்பை எடுத்து வாரவும்.
ஐ. மறுபடியும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும்.

எப்பொழுது முகம் கழுவது நல்லது:

1. எப்பொழுது வேண்டுமானலும், குறிப்பாக உங்கள் எதிரிகள் அருகில் இல்லாத போது நலம்
2. கல்யாணமானவர்கள், காலையில் Alarm வைத்து 5மணிக்கே எழுந்து முகம் கழுவிக் கொண்டு படுப்பது நலம், மறுநாள் உங்கள் மனைவியை பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும்… பொறாமை தீயின் வடிக்களை ணலாம்.
3. வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் குறைந்தது20நிமிடங்களாவது முகம் கழுவுவது நலம்.