Monday, September 7, 2015

கூகுளில் தேடலை விரைவாக மேற்கொள்ள

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

இணைய தளம் கட்டளை (The site: command):

இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக, micorsoft  இணைய தளத்தில் மட்டும் software என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், software site www.micorsoft.com எனக் கொடுக்க வேண்டும். இந்த கட்டளையானது, tamilrockers இணைய தளத்தில் மட்டும், software என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். இதனால், மற்ற இணையதளங்களில் இந்த சொல் பயன்பாடு உள்ளதா என்ற தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.

குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடல் (inurl:command):

இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.

விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”):

தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, super computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.

குறிப்பிட்ட சொல் உள்ள டெக்ஸ்ட் பக்கம் மட்டும் தேடிப் பெற (intext command):

இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு 'chicken' என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.

'convert' கட்டளை:


இது ஒரு ஆப்பரேட்டர் இல்லை; டூல் என்று சொல்லலாம். இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். எடுத்துக் காட்டாக, convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும்.


மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. இதே போல பல குறுக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறிந்து நாம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

Wednesday, August 26, 2015

ஜி மெயில்


ஜி மெயிலில் அனுப்பிய மெயிலை திரும்பி பெரும் வசதி

1. உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில் நுழையவும். கிடைத்தவுடன், உங்கள் திரையில் வலது மூலையில் மேலாகக் காணப்படும் ஐகான் அருகே செல்லவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், 'Settings' என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. மீண்டும் திரையில் வலது பக்க மூலையில் உள்ள 'Labs' என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

3. இப்போது கிடைக்கும் விண்டோவில், கீழாகச் செல்லவும்.

4. இங்கு “Undo Send” என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். இதனை இயக்கும் வகையில் enable செய்திடவும்.

5. தொடர்ந்து திரையின் கீழாகச் சென்று 'Save Changes' என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி, நீங்கள் ஜிமெயில் தளத்தில், மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், மேலாக, “Your message has been sent” என்பதன் அருகே, Hit 'Undo' to recall your email என்று ஒரு செய்தி கிடைக்கும். 10 விநாடிகளுக்குள், இந்த இடத்தில் கிளிக் செய்தால், அஞ்சல் அனுப்பப்பட மாட்டாது. இந்த கால நேரத்தை அதிகப்படுத்த விரும்பினால், மீண்டும் லேப்ஸ் சென்று அங்கு “Undo Send” ஆப்ஷன்ஸ் பகுதியில், இந்த நேரத்தினை 30 விநாடிகள் வரை நீட்டிக்கலாம்.

ஆரோக்கிய உணவு

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".

ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,



1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டு body mass indexபயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்

உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து

உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது
என்று உங்களுக்கு தெரியுமா???


டயட், உடற்பயிற்சி, உண்ணா நோம்பு என பல வகைகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சி செய்கிறோம். நம் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைவதனால் தான் நமது உடல் எடை குறைகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த கொழுப்பு எப்படி நம் உடலை விட்டு வெளியேறுகிறது என்று எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா??

சமீபத்தில் நடத்தப்பட ஓர் அறிவியல் ஆய்வில், மனித உடலில் இருந்து எந்த வகையில் கொழுப்பு கரைந்து வெளியேறுகிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்....

கொழுப்பு, எனர்ஜியாக மாறி வெளியேறுவது இல்லை பெரும்பாலும் நாம், கொழுப்பு எனர்ஜியாக அல்லது எரிக்கப்பட்டு வெளியேறுகிறது என்று தான் நம்புகிறோம். ஆனால், அவ்வாறான நிகழ்வின் காரணமாக கொழுப்பு வெளியேறுவது இல்லை.

கொழுப்பு எப்படி உருவாகிறது
உண்மையில், உணவாக உட்கொள்ளப்படும் அதிகப்படியான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள். இதில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.

ஆக்ஸிடேஷன் செயல்பாடு
உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகளாக கட்டமைந்து இருக்கும் இந்த ப்ளாக்குகள் உடைந்து வெளியேறுகிறது, இந்த செயல்பாடை ஆக்ஸிடேஷன் என்று கூறுகிறார்கள்.

ட்ரைகிளிசரைடு எப்படி எரிக்கப்படுகிறது
ட்ரைகிளிசரைடு எரிக்கப்படும் செயல்பாட்டில், நிறைய ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை, CO2 மற்றும் H2O-களை கழிவாக தயாரிக்க எடுத்துக்கொள்கிறது.

10 கிலோ எடை குறைக்க
பத்து கிலோ எடையிலான கொழுப்பை எரிக்க, 29 கிலோ ஆக்ஸிஜனை நீங்கள் மூச்சாக உள் இழுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் நடக்கும் கொழுப்பை எரிக்கும் இரசாயன மாற்ற செயல்பாட்டில் 28 கிலோ CO2 மற்றும் 11 கிலோ தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.

CO2-வாக வெளியேறும்
கொழுப்பு எடை குறைப்பு செயல்பாட்டில் 84% கொழுப்பு CO2-வாக தான் வெளியேறுகிறது. இது நுரையீரல் வழியாக வெளியேறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள 16% கொழுப்பு மீதமுள்ள 16% கொழுப்பு உடலில் இருந்து நீராக வெளியேறுகிறது. இந்த ஆய்வின் மூலமாக, உடல் எடை குறிப்பில் முக்கியமாக செயல்படும் உடல் உறுப்பு நுரையீரல் என்று கண்டறிந்துள்ளனர்.

நீராக வெளியேறும் கொழுப்பு உடல் எடை குறைப்பு செயல்பாட்டில், சிறுநீராகவும், வியர்வையாகவும், கண்ணீராகவும், மற்ற உடல் திரவாமாகவும் கொழுப்பு நீர் வடிவில் வெளியேறுகிறது என கண்டறிந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டுள்ளது. ரூபன் மீர்மேன் மற்றும் ஆண்ட்ரூ பிரவுன் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்

ஜாக்கிங் சிறந்த பயிற்சி உடல் எடைக் குறைப்பதற்கு சிறந்த பயிற்சி ஜாக்கிங், ரன்னிங் தான் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த பயிற்சியில் ஈடுபடும் போது தான் நாம் அதிகமாக சுவாசிக்க முடியும், மற்றும் நுரையீரல் நிரம்ப மூச்சை உள்ளிழுத்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.a

Tuesday, June 9, 2015

மருத்துவம்

தோலை சுத்தமாக வைப்பது அவசியம். ஏனெனில் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான நுண்கிருமிகள் மற்றும் சீதோஷ்ண மாற்றம், வேதிப்பொருட்களின் தாக்கம் என தோலுக்கு நேரடியாக தொல்லை தரக்கூடிய வாய்ப்புகள் ஏராளம் உண்டு. ஆகவே நாம் ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் பொழுதும் அல்லது வெளியிலிருந்து வந்த பின்பும் தோலினை சரியான படி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையயனில் நுண்கிருமிகளாலும், வேதிப்பொருட்களாலும் தோல் தாக்கப்படுவதை நம்மால் தவிர்க்க இயலாமல் போய்விடும். வெயில் காலத்தில் வியர்வை துவாரங்களில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வேனிற்கால கட்டிகளும், பருக்களும் உண்டாகி தோல் பாதிப்படைந்துவிடும். வெயில் காலத்தில் தோலில் கட்டிகள் தோன்றுவதாலும், குருக்கள் தோன்றுவதாலும் தோலின் இயற்கை நிறம் மற்றும் மென்மை பாதிப்படைந்து பலவித தோல் நோய்கள் உண்டாகிவிடுகின்றன. நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட விலங்கு கொழுப்பு சேர்ந்த சவுக்காரக்கட்டி என்று சொல்லப்படும் சோப்புகளை பயன்படுத்துவதால் வியர்வை துவாரங்கள் அடைபடுகின்றன. தோல் விரைவில் வறட்சியடைகிறது. ஆகவே நமது முன்னோர்கள் தோலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய, உடல் உஷ்ணத்தை தணிக்கக்கூடிய நறுமணமுள்ள மூலிகைப் பொடிகளை பயன்படுத்தி வந்தனர். இவை தோல் வறட்சியை தவிர்ப்பதுடன், உடலுக்கு நறுமணத்தையும், மூச்சுக்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தின. இதனால் தோல் நோய்கள் உண்டாகும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது. வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட வாசனை திரவியங்களை உடலில் பூச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஏனெனில் மூலிகைகளின் நறுமணம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. பிறந்த குழந்தைகளுக்கு கூட நலம் செய்யும் மூலிகை குளியல் பொடி பாரம்பரியமாக பல இடங்களில் குறிப்பிட்ட இனத்தவரிடம் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வரும் குளியல் பொடிகளில் சிறப்பு வாய்ந்தது மட்டுமின்றி, தனித்தன்மையுடையது தான் நலுங்குமா.

நலுங்குமாவில் சேரும் முதன்மையான பொருள் பாசிப்பயறு ஆகும். பேசியோலஸ் ரேடியேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த பாசிப்பயிறு என்று அழைக்கப்படும் பச்சை பயிறில் மெத்தியோனின், டிரிப்டோபேன், தைரோசின் மற்றும் லைசின், வேலின், லியுசின் போன்ற புரதங்களும் நிறைந்துள்ளன. இவை தோலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. குழந்தை நீராட்டு, பூப்புனித நீராட்டு, திருமண சடங்கு போன்றவற்றில் நீராடுவதற்கு நலுங்குமா பயன்படுத்துவது நமது வழக்கம்.

நலுங்குமாவை நாமே வீட்டில் தயார் செய்யலாம். பாசிப்பயிறு-1பங்கு, வெட்டிவேர்-2 பங்கு, சந்தனம்-2 பங்கு, கோரைக்கிழங்கு-கால் பங்கு, கார்போகரிசி-கால் பங்கு, விளாமிச்சம் வேர்-2பங்கு, கிச்சிலிக்கிழங்கு-2பங்கு ஆகியவற்றை சுத்தம் செய்து, அளவுப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பயறு, கார்போகரிசி இரண்டையும் இளவறுப்பாக வறுக்க வேண்டும். மற்றவற்றை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து சரக்குகளையும் தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக மைய இடித்து, சலித்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை உடலில் தேய்த்து குளித்து வர கோடைக்காலத்தில் தோன்றும் வியர்வை நாற்றம், தோல் நிறமாற்றம், அரிப்பு ஆகியன நீங்கும்.

நலுங்குமாவு தயார் செய்ய இயலாதவர்கள் வெறும் பாசிப்பயிறை மற்றும் இளவறுப்பாக வறுத்து, பொடித்து, சலித்து குளித்து வரலாம். எனது வீட்டில் முள்முருங்கை மரம் உள்ளது. இதன் இலையை தினந்தோறும் அடையாக செய்து சளித் தொல்லைக்கு சாப்பிட்டு வருகிறேன். இதனை தினந்தோறும் உட்கொள்ளலாமா?

முள்முருங்கை உஷ்ணம் வீரியம் உடையது. கபத்தொல்லையை நீக்குவதற்கு மட்டுமின்றி தடைப்பட்ட மாதவிலக்கை ஏற்படுத்தவும் முள்முருங்கை பயன்படுகிறது. இதனை அரிசியுடன் சேர்த்து அடையாக தட்டியோ அல்லது தோசையாக வார்த்தோ மூன்று முதல் ஐந்து நாட்கள் சாப்பிடலாம். நாட்பட்ட தீவிர சளியில் ஏழு நாட்கள் வரை உட்கொள்ளலாம். மாதவிலக்கான நாட்களில் முள்முருங்கையை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இரத்தப்போக்கு அதிகரிக்கும்.

உங்களை அழகாக்கும் சில உணவு வகைகள்

உங்களை அழகாக்கும் சில உணவு வகைகள்

(Beetroot) : வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் B6 சத்துக்கள் நிறைந்தது பீட்ரூட். இச்சத்துக்கள் எம் மேனியை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதோடு பீட்ரூடில் antioxidant எனப்படும் லீகோபீன் உள்ளதால் தோலின் நெகிழ் தன்மைக்கு உதவுகிறது. ஆக மேனியை இளமையாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க பீட்ரூட் சாறு அல்லது சாலேட் செய்து உண்டுவரலாம்.

முட்டை : முட்டை கூந்தல் மற்றும் தோலுக்கு மிகச்சிறந்ததோடு நகங்களை வலுவாக்கவும் வல்லது. முட்டையில் இருக்கும் புரதசத்து, விட்டமின் B7, இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் போன்றவை நகங்களின் உறுதியையும் அழகையும் பாதுகாக்கிறது. மேலும் ஆரோக்கியமான நகங்கள் வளர்வதற்கும் உதவுகிறது. முட்டையை எவ்வகையிலும் உண்ணலாம். காலை உணவிலும் ஆம்லெட்டாக இரவு உணவு நேரத்திலும் முட்டையை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

புதினா பசும் தேநீர் : 20 சதவீத பெண்கள் முகப்பரு தொல்லையால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர், நீங்களும் அதில் ஒருவரெனில் முகப்பரு தொல்லையிலிருந்து விடுபட்டு தூய்மையான அழகான சருமம் வேண்டுமெனில் புதினா பசும் தேநீரை பரிந்துரைக்கின்றனர். ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனால் ஏற்படும் முகப்பரு வராமல் தடுக்க புதினா இலைகள் கலந்த சூடான தேனீர் பருகிவரலாம்.

தயிர் : நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமெனில் காலையில் ஏதேனும் தானிய உணவுடன் சிறிதளவு தயிரை சேர்த்துக்கொள்ளலாம். அதோடு புரத சத்து நிறைந்த இந்த தயிரை இனிப்புச் சிற்றூண்டியா செய்து உண்ணலாம். பொதுவாக எமது மதிய உணவில் தயிரையும் சேர்த்துக்கொள்ள தவறுவதில்லை. தயிரில் ஒருவகை கால்சியம் எனும் கனிமம் அதிகம் இருப்பதால் உங்களின் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தயிரை உணவில் மட்டுமல்லாது கூந்தல் மாஸ்க் செய்தும் பயன்படுத்தலாம். பொலிவான அழகான கூந்தல் வளர ஊட்டமளிக்கும்.

பச்சை ஓட்ஸ்(Raw oats) : கூந்தல் முடி உதிர்வதை கட்டுப்படுத்தக்கூடியது இந்த ஓட்ஸ். பச்சை ஓட்ஸ்சில் வைட்டமின் B, zinc மற்றும் சிலிக்கா சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது கூந்தல் முடிஉதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆக ஸ்மூத்தியாகவோ அல்லது தயிர் பழங்கள் சேர்த்தோ ஓட்ஸ்சை காலை உணவாக உண்ணலாம்.

நண்டு வறுவல்

தேவையான பொருட்கள்

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு 10 பற்கள்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
புளி கரைசல் - 1 ஸ்பூன்
தேங்காய் விழுது - 1/2 கப்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு எண்ணை - தேவையான அளவு

செய்முறை
நண்டை ஓடு நீக்கி ,சுத்தம் செய்வவும்.

வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும்
கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை தலித்து,வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்க்கவும்
நன்கு வதக்கிய பின்னர் நண்டு மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடிய படி வேக விடவும்
நண்டு வெந்து கெட்டியானதும் தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள கிளறி விடவும்