Wednesday, February 18, 2015

உங்களுக்குத் தெரியுமா?


திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும். 

நியுட்ரினோ

நியுட்ரினோ என்ற வார்த்தைக்கான பொருள், ‘சிறிய சார்புருதியற்ற ஒன்று’ (small neutral one) என்பதாகும். அதாவது, மின்காந்த விசையால் (Electromotive Force) எந்த பாதிப்பும் அடையாமல் சார்புருதி அற்ற ஒரு பொருள் என்று கூறலாம். இது அணுவினின்றும் சிறிய பொருள் என்றும், இதன் திரண்ட நிலை (mass) ஏறக்குறைய பூஜ்ஜியம் என்றும் கூறப் படுகிறது. 1930- ஆம் ஆண்டு வுல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) என்ற இயற்பியல் மேதையால், இப்பொருளின் முதல் வடிவம் கோட்பாடாக அறிவிக்கப் பட்டது. பின், 1956 -இல் கிளைட் கோவான், பிடெரிக் ரெயின்ஸ் ஆகியோரால் நியுட்ரினோ கண்டு பிடிக்கப் பட்டது. தற்போது இந்த பொருள், ஒளியை விட வேகமாக பயணிக்க வல்லது என்று ஐரோப்பிய அறிஞர்களால் தெரிவிக்கப் படுகிறது.

நியுட்ரினோ எந்த பொருளையும் ஊடுருவிச் செல்லக் கூடிய திறன் கொண்டது. அதனால், ஜெனிவாவில் உள்ள CERN என்ற ஆய்வுக்கூடத்தில் 1300 மெட்ரிக் டன் எடையுள்ள இயந்திரம் (OPERA) கொண்டு நியுட்ரினோவை பூமிக்குள் செலுத்தினர். சுமார் 16,000 நியுட்ரினோக்களின் வேகத்தை ஆராய்ந்தனர். 2.3 மில்லி செகண்ட் நேரத்தில், 730 கிலோமீட்டர் பயணித்த நியுட்ரினோ, ஒளியை விட சுமார் 60 நானோ செகண்ட் அதிக வேகத்தில் சென்றதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை அதி நவீன கருவிகள் மூலமாக, நுணுக்கமான கடிகாரத்தின் துணை கொண்டு கண்டு பிடித்திருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சி மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப் படுகிறது. இதனை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதற்கான காரணமாக சிலர் கூறுவது, ‘இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்னவென்றால், சில தவறுகள் எங்கள் கண்ணுக்கும்,மூளைக்கும் எட்டாக் கனியாக இருந்திருக்கலாம். அவை முடிவின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.இது மேலும் உற்று கவனிக்கப் படவேண்டிய ஆராய்ச்சி’ என்பதாகும். இதனால், குழுவினர், தீர்கமான முடிவை அறிவிக்கவில்லை என்பது தெளிவாகிறது’.

மேலும் சிலர், ‘இந்த ஆராய்ச்சியின் முடிவில் கூறப் பட்டுள்ள நிலையற்ற தன்மை நேரம் (uncertainty) பத்து நானோ செகண்ட் ஆகும். இது சாத்தியமாவது மிகவும் கண்டினம்’ என்கின்றனர்.

இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தையும், ஆச்சர்யத் தன்மையையும் ஏற்கும் சிலர், மேலும் பல ஆராய்ச்சிகளை செய்து இதே வேகத்தில் நியுட்ரினோ பயணிக்கிறது என்று நிரூபித்தால், தாங்கள் ஒப்புக் கொள்ளத் தயார் என்றும், இதை ‘சாத்தியம் அற்றது’ என்று சொல்லி முழுமையாக ஒதுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். இதையெல்லாம் தாண்டி ஒரு கடைசி கேள்விக்கு பதிலாய்,

‘இந்த கண்டுபிடிப்பு ஐன்ஸ்டீன்-இற்கு இழுக்காக அமையுமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். இது நிரூபிக்கப் பட்டால், இயற்பியலை மாற்றியமைத்துவிட்டதாக அர்த்தமல்ல! இயற்பியலை மேலும் புதுப்பித்த கண்டுபிடிப்பாகவே அமையும்!”, 

மழைப் பொழிவு பற்றிய அறிவியல்


மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது.

பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்துமலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது.

இதேபோல,
‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99)
என்ற பாடல் வரிகள் கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழையாகப் பொழிகிறது. இப்படியாக மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

அகநானூறு, ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி …………….. பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்று கூறுகிறது. இதுவும் கடலில் இருந்த நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

ஆனால் அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ‘தேல்ஸ்’ மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ‘அரிஸ்டாட்டில்’ போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்ணீருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர் (Hydraulics and hydraulic research – a Historical Review ) இதுதான் கி.பி 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து

அறிவியல் பாகம் 2

11. தங்கம், பாதரசம் இவற்றின் அடர்த்தி எண்களைக் கூறுக?
தங்கத்தின் அடர்த்தி எண் 19.3 கிராம். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6 கிராம்.

12. கடலின் ஆழம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடலின் அடிப்பகுதியில் ஒருவெடிகுண்டு வெடிக்கச் செய்வர். அந்த வெடியின் ஒலிகரையை வந்தடையும் நேரத்தை ஹைடிரோ போன்கள் என்ற இயந்திரத்தில் பதிவு செய்து கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கணக்கிடுகின்றனர்.

13. ரயில் எஞ்சினின் முன் உள்ள விளக்குகளின் ஒளி அதிக தூரம் வரை தொரிகிறது. சாதாரண மின் விளக்குகள் அவ்வளவு தொலைவு தொரிவதில்லையே ஏன்?

ரயில் எஞ்சின் முன் விளக்குகளில் குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ஆடிகள் தம் மீது விழும் ஒளியைப் பிரதிபலித்து வெகு தூரம் வரை பாய்ச்சும் தன்மை உடையது.

14. சிறிய இரும்புகுண்டு தண்ணீரில் மூழ்கி விடுகிறது. ஆனால் மிகப் பெரிய கப்பல் நீரில் மிதக்கிறது. அது எப்படி?

சிறிய இரும்புகுண்டு தண்ணீரில் மூழ்கும்போது அது வெளியேற்றும் தண்ணீ¡¢ன் அடர்த்தி எண்ணைவிட இரும்பு குண்டு அதிக அடர்த்தி உடையது. எனவே இரும்பு குண்டு நீரில் மூழ்குகிறது.

பொரிய கப்பல் நீரில் மிதக்கும் போது அதனால் வெளியேற்றப்படும் தண்ணீரின் அடர்த்தி கப்பலின் எடையைவிட அதிகம். எனவே கப்பல் மிதக்குகிறது.

15. மயக்கமடைந்தவர்களைத் தரையில் கிடத்தும் போது தலை சற்று தாழ்வாகவும், உடல் சற்று மேலாகவும் கிடத்த வேண்டும் ஏன்?

தலைப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் என்பதற்காக. ரத்த ஓட்டம் அதிகமானால் விரைவில் மயக்கம் தெளிவு பெறும்.

16. ஏரி, குளங்களில் காணப்படும் நீரின் மேற்பகுதி வெப்பமாக இருக்கும். ஆனால் நீரின் அடிப்பகுதி குளிர்ச்சியாகவே இருக்கும் ஏன்?

நீர் ஓர் அரிதில் கடத்தி, எனவே வெப்பம் நீரின் மேற் பகுதியிலேயே ஆவியாகி சென்று விடுகிறது. ஆகவே நீரின் அடிப்பகுதி குளிர்ச்சியாக இருக்கிறது.

17. பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஐசக் நியூட்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். இவர் 1642 ஆம் ஆண்டு லிங்கன்ஷயர் எனும் இடத்தில் பிறந்தார்.

18. கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம் ஏன்?

கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக கழிவு நீர்வியர்வையாக வெளியேறுகிறது. குளிர்காலத்தில் அதிக வியர்வை ஏற்படுவதில்லை. எனவே குளிர் காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம்.

19. காற்று வேகமானி (Anemo meter) என்றால் என்ன? அதன் பயன் யாது?

காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவிக்கு காற்று வேகமானி என்று பெயர். இது வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

20. வானில் ஏற்படும் இடி, மின்னல் பூமியை வந்தடையும் போது இடி ஓசை இரண்டாவதாகவும் மின்னல் ஒளி முதலாவதாகவும் வந்தடைவதேன்?

அறிவியல் பாகம் 1

1. ஆற்றின் ஒரு கரையில் இருந்து ஒலி எழுப்பினால் அது மறு கரையில் இரு முறை ஒலி ஏற்படுத்துவது ஏன்?

நீர் ஓர் ஒலி கடத்தி, காற்றைவிட வேகமாக ஒலியைக் கடத்தும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு கரையில் எழுப்படுகிற ஒலி மறு கரையில் நீ¡¢ன் மூலமாக முதலாவதாகவும் காற்றின் மூலமாக இரண்டாவதாகவும் ஒலிக்கிறது.

2. தண்ணீரை விட அதன் நுரை வெண்மையாகத் தொ¢வது ஏன்?

தண்ணீ¡¢ன் மேல் விழும் ஒளிக் கதிர்கள் நீ¡¢ல் ஊடுருவி உள்ளே சென்றுவிடும். ஆனால் நீ¡¢ன் நுரை மீது விழும் ஒளிக்கதிர் பிரதிபலிக்கிறது. எனவே நீ¡¢ன் நுரை வெண்மையாகத் தொ¢கிறது.

3. மனித உடலில் உள்ள இரத்தத்தின் வகைகள் யாவை?

இரத்தத்தை நான்கு வகைகளாகப் பி¡¢த்துள்ளனர். அவை A, B, AB, O என்பனவாகும்.

4. நமது எடையில் இரத்தத்தின் எடை என்ன விகிதத்தில் உள்ளது?

நமது உடலின் எடையில் இரத்தத்தின் எடை 9% ஆகும்.

5. நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஜேம்ஸ்வாட் என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தார்.

6. பருமனான கம்பி அல்லது மெல்லிய கம்பி இவற்றில் அதிக சுருதியை ஏற்படுத்த எந்த வகைக் கம்பி பயன்படுத்தப் படவேண்டும்?

மெல்லிய கம்பி பயன்படுத்தப்பட வேண்டும்.

7. சுரமானி என்றால் என்ன?

இழுத்துக் கட்டப்பட்டுள்ள கம்பிகளின் அதிர்வுகளைக் கண்டறியப் பயன்படும் கருவி சுரமானி என்பதாகும்.

8. தண்ணீ¡¢ல் மூழ்கும் இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதப்பது ஏன்?

தண்ணீ¡¢ன் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைக் காட்டிலும் குறைவு. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.

பாதரசத்தின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைவிட அதிகம். எனவே பாதரசத்தில் இரும்புக் குண்டு மிதக்கிறது.

9. மிக விரைவில் ஆவியாகும் திரவம் எது?

ஆல்கஹால்

10. மனித உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206

பண்டைத் தமிழர் அறிவியல் சிந்தனைகள்

பண்டைத் தமிழர் தம் அறிவியல் உணர்வையும் தொழில்நுட்பத் திறனையும் அறிய அவர்களது இலக்கிய இலக்கண நூல்களும், அவற்றின் உரைகளுமே பொ¢தும் உதவுகின்றன. சில கல்வெட்டுச் சான்றுகளும் தொல்பொருளியல் சான்றுகளும் ஓரோ¡¢டத்துத் துணைபு¡¢தலும் உண்டு. மானசொல்லாச (கி.பி. 1131) மானசார (கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு), ஸ்ரீகுமாராவின் சில்பரத்ன (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) வராஹ மிக்ஹரா¢ன் ப்ரகத்சம்ஹத, பஞ்ச சித்தாந்திகா (கி.பி. 500) ஆர்யபட்டா¢ன் ஆர்யப்பட்டீய (கி.பி. 600), மஹா வீரச்சார்யாவின் கணித சார சம்ஹிதை (கி.பி. 850) நாராயணா¢ன் கணித கெளமுதி (கி.பி 1350), பீல சம்ஹிதை, ரசசுசம்ஹிதை (கி.பி 100), சுகருதம்ஹிதை, விருக்ஷ¡யூர்வேத, கல்வ சூத்திரம் என வடமொழியில் நிறைந்து காணப்படுவது போல அறிவியல் நூல்கள் தமிழில் நிறைய இல்லை. எனினும், கணக்கதிகாரம், கப்பல் சாத்திரம், அகத்தியர் குழம்பு, போகர் வைத்தியம் 100, சித்தராரூடச்சிந்து, சரபேந்திர வைத்திய நூல்கள் முதலான அறிவியல் இயல்புடைய சில நூல்களும் தமிழில் கிடைக்கின்றன. இவை அனைத்தையும் ஆதாரமாகக் கொண்டே பண்டைத் தமிழா¢ன் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகளை அறிய முடியும்.

பண்டைத் தமிழா¢ன் அறிவியல் சிந்தனை வரலாற்றைச் சிந்துவெளியிலிருந்து தொடங்குவது தவறாகாது. சிந்துவெளி நாகா¢கம் தமிழா¢ன் மூதாதையரான திராவிடர்க்கு¡¢யது என ஏற்றுக் கொண்டால், அந்த நாகா¢கத்தின் பழஞ்சுவடுகள் தமிழா¢டத்தும் காணப்படும் என எதிர்ப்பார்ப்பது இயல்பே. அவ்வகையில் பார்க்கும் போது மொகெஞ்சொதரோ, ஹரப்பா நாகா¢கத்தின் சிறப்புக்களான நகர அமைப்பு முறையை அவர்களின் தொழில்நுட்ப அறிவுக்குச் சான்றாகக் கூறலாம். இன்றும் கூடப் பல நகரங்களில் பாதாளச்சாக்கடை முறை நடைமுறையில் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் கி.மு. 2800 வாக்கில் சிந்துவெளி நாகா¢கங்களில் பாதாளச் சாக்கடையுடன் கூடிய நகரங்கள் இருந்தன என அறியும் போது அந்தத் தொல் பெரும் மக்களின் தொழில் நுட்ப அறிவை எண்ணி வியக்காமல் இருக்க இயலாது. செங்கல் சூளைகள், பானை தயா¡¢த்தல், செம்பு- வெண்கலக்கருவிகள், முத்திரைகளில் உருவங்கள் பதிக்கும் கலை என்பனவெல்லாம் அவர்தம் அறிவியல்-தொழில்நுட்பச் செயல்பாட்டுக்கான சிறந்த ஆதாரங்களாகும்.

ஹரப்பா, மொகெஞ்சொதரோவிலுள்ள கோட்டை அமைப்பும், பொ¢ய குளமும் இன்றும் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவற்றைக் கட்டப்பயன்பட்ட செங்கல் அமைப்பு பற்றிய விவரங்களை அவர்கள் குறித்து வைக்கவில்லை என்றாலும் கி.மு. 5-6ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் கல்லசூத்திரம் என்ற வடமொழி நூலில் காணப்படும் செங்கல் தொடர்பான சில செய்திகள் சிந்துவெளி மக்களிடமிருந்து பெறப்பட்டதாகலாம் என தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கருதுகிறார். யாகங்கள் செய்வதற்கு பல்வேறு உருவ அமைப்பில் வேள்விப்பீடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றைக் கட்டப் பயன்படும் செங்கல்லின் அளவு சுல்வசூத்திரத்தில் கூறப்படுகிறது. இந்த அளவு முறையின் முந்தைய சிந்தனை சிந்துவெளியில் பிறந்திருக்க வேண்டும். காரணம் சமஸ்கிருதத்தில் செங்கல்லைக் குறிக்கப் பயன்படும் சொல்லான 'இஷ்டக' (istaka) என்பதற்கு இந்தோ - ஆ¡¢ய மொழி மூலம் கிடைக்கவில்லை. இது திராவிடச் சொல்லாக இருக்க வேண்டும் என்கிற கருத்தோடு சட்டோபாத்யாயா உடன்படுகிறார்.

'The World for brick in Vedic literature is
istaka. Though the Controversy over the
exact orgin of the word is still going on, it
may be rash for us to ignore outright the
view of Przylusky and other who strongly
argue that it is Dravidian in origin, though
eventually borrowed by the vedic peoples'

இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இச்சொல் மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் 'இஷ்டிக' எனவும் தமிழில் 'இட்டிகை' என்றும் வழங்கப்படுகிறது.

'இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென'
(அகம். 167 : 13)

'நாட்பவி மறந்த நரைக்கண் இட்டிகைப்
பு¡¢சை மூழ்கிய பொ¡¢யரை ஆலத்து'
(அகம் 287 : 6-7)

'இட்டிகை: செங்கல், ஈண்டுபலியீடம் - என்பது உரை.

இட்டிகை கொண்டு கட்டப்பட்ட பலியீடம் இட்டிகை என்று வழங்கப்பட்டதை அறிகிறோம். குறிப்பிட்ட பறவை உருவில் யாகசாலையிலுள்ள பீடங்கள் அமைப்பதற்கு எவ்வகை அளவில் அமைந்த செங்கற்களைப் பயன்படுத்த வேண்டும் எனச் சுல்வசூத்திரம் விளக்கமாகக் கூறுவதையும், இட்டிகை கொண்டு கட்டப்பட்ட இடத்தை அகநானூறு பலியீடம் என வழங்குவதையும் சட்டோபாத்யாயாவின் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்போது சிந்துவெளி மக்களின் செங்கல் பயன்பாட்டறிவு வெளிச்சமாகிறது. மேலும், இதன் மூலம் இவர்களது கணித அறிவும் தெளிவுபடுகிறது. சிந்து ஸ்கேல் (Indus Scale) ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 1.32 Inch அளவுடையது. கோடுகளை இட்டு எண்களை உணர்த்தினர். I, II, III, IV etc. (Bose, 137-138).

சிந்துவெளி நாகா¢கம் ஒரு சிறந்த முன்னேற்றமுள்ள வேளாண்மைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட நகர நாகா¢கம் என்பதே அறிஞர்களின் கருத்து (bose,7). கோதுமை, பார்லி, எள், கடுகு முதலியன விளைந்தன. கால்நடை வளர்ப்பும், பருத்தி நெசவும் மேற்கொள்ளப்பட்டன. பலதிறக் கைவினைஞர்கள் வாழ்ந்தனர். வெளிநாட்டு வாணிபமும் சிறந்திருந்தது. இவையெல்லாம் சிறப்புற நடைபெறச் செய்வதற்கு ஒரு மத்திய அரசு நிர்வாகம் இருந்தது. கோட்டைகளும் துறைமுகங்களும் இருந்தன. இங்கு கிடைக்கும் 2500க்கு மேற்பட்ட முத்திரைகள் பல ரகசியங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளன. அவற்றை ஐயந்திரப் படித்துவிட்டல் இந்த நாகா¢கம் பற்றிய இன்னும் பல செய்திகள் வெளிவரும். இதன் அறிவியல் தொழில்நுட்பத் திறனை அறியவும் இயலும். இதன் காலம் கி.மு. 2800-1800 ஆகும்.

சிந்துவெளி நாகா¢கம்-சிந்துவெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்கள் இந்த வானியல் அறிவும் பெற்றிருந்தனர் எனச் சில சான்றுகள் மூலம் மெய்ப்பிக்க முற்படுகின்றனர். ஊர் நடுவே உள்ள பொ¢யகுளம் புனித நீராட்டுக் குளமாகலாம் எனக் கருதுகிறார்கள். நடராசா¢ன் தொல் வடிவம் எனக் கருத்தத்தகுந்த ஒன்றிரண்ட முத்திரைகள் காணப்படுவது கொண்டு இம்மக்களின் சமயச் சிந்தனை பற்றியும் குறிப்பிடுகின்றனர். அறுமீன் காதலன் (முருகன்) வழிபாடும் இருந்திருக்கலாம் என எண்ணுகின்றனர். அந்த முத்திரைகளில் காணப்படும் விலங்குகளைக் கொண்டு இந்த மக்களுக்கு நன்கு பழக்கமான விலங்குகள் இவை எனவும் கருதுகின்றனர். ஸ்வெல், குகா (Sewell, Guha) இருவரும் மொகெஞ்சொதரோவில் 37 சிற்றினவகை விலங்குகளையும், பிரசாத் ஹராப்பாவில் 30 சிற்றினவகை விலங்குகளையும் கண்டுள்ளனர். (bose, 405) இவற்றுள் சில வீட்டு விலங்குகள்: சில காட்டு விலங்குகள்; மீதமுள்ளவை வீட்டு வெளியில் வாழும் விலங்குகள் (Semi-domestic)

திமிலுடைய மாடுகள், எருமைகள், கழுதை, செம்மறியாடு, வெள்ளாடு, நாய், கோழி, யானை, புலி, மயில், நா¢, ஓநாய், மான், காட்டெருமை முதலியன இங்குக் காணப்பட்ட விலங்குகளில் சிலவாகும். குதிரை காணப்படவில்லை. சிந்துவெளி நாகா¢கத்தின் கடைசிக்கட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களில் மிக அழுகிய நிலையில் குதிரை எலும்புகள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தொ¢கிறது. இவர்கள் பழக்கிய நாய் Canis tenggeranus harappensis - வகைச்சார்ந்ததாகும். விலங்குகளைப் பழக்கியதன் மூலம் உணவு தேடும் நாகா¢க நிலையிலிருந்து உணவு உற்பத்தி செய்யும் நாகா¢க நிலைக்கு வளர்ந்துள்ளனர் என வரலாற்றாசி¡¢யர்கள் கூறுவர். அவ்வகையில் பார்க்கும்போது, சிந்துவெளி மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டமை புலனாகும். ஆமை, மீன் முதலிய கடல்வாழ் விலங்குகள் உணவுக்காகப் பயன்பட்டன. அவற்றின் ஓடுகள் கலைநுட்பம் வாய்ந்த அழகுப்பொருட்கள், அணிகலன்கள் செய்யப் பயன்பட்டன. ஓடுகளாலான வளையல்களின் நேர்த்தியைக் காணும்போதும், சிந்துவெளி மக்கள் அணிகலன் செய் தொழில்நுட்ப அறிவு பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது. நாய், புலி, முதலை, புறா, கோழி, வாத்து வடிவம் கொண்ட பொம்மைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தி¡¢கை சுற்றும் பானைத் தொழில் (Wheel Made Wane) சிறந்திருந்தது. விலங்குகள் பானைகளில் வரையப்பட்டன. சில வகை விலங்குகள் மருத்துக்காகவும் பயன்பட்டன.

இண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?

இங்கே வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றால் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், இங்கேஇருந்து செல்லும்போதே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அந்த டிரைவிங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும்.
சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றை இணைத்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.

உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள்

உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள்

1. க்ளென்சிங்:
சருமப் பாதுகாப்பிற்கு மிக அடிப்படையான விடயம் தான் க்ளென்சிங் செய்வது. இது சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி எண்ணெய்ப்பசையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் விட்டமின்கள் மற்றும் சன்ஸ்கிரீன் போன்றவை சருமத்துள் ஊடுருவிச் சென்று ஊட்டமளிக்கத் துணைபுரிகின்றது.

எல்லா க்ளென்சரும் ஒரே மாதிரியானவை என்று சொல்லிவிட முடியாது. பேசியல் க்ளென்சர் சோப் இல்லாததாக இருக்க வேண்டும்.

நீங்கள் உடலின் ஏனைய பாகங்களுக்குப் பயன்படுத்தும் சோப் முகத்திற்கு தீங்கிழைக்கக் கூடியது. அத்தோடு சருமப் பாதுகாப்புத் தயாரிப்புகள் மலிந்துகிடக்கும் நிலையில் உங்கள் சருமத்திற்குப் பொருந்தக் கூடிய ஒன்றைத் தெரிவு செய்வது முக்கியமானது.

உங்களுடையது மிக உலர்ந்த சருமமாயின் கண்டிப்பாக நீங்கள் க்ரீமி க்ளென்சர்களைப் பயன்படுத்த வேண்டும்.

உலர்ந்த மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடிய (sensitive) சருமமாக இருந்தால், க்ரீமி க்ளென்சராக இருந்தாலோ இல்லாவிட்டாலோ கண்டிப்பாக ஆல்கஹால் கலந்ததாக இருக்கக் கூடாது. எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் alpha-hydroxy கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

2. நீர்:
மனித உடல் நீரினால் நிரப்பப்பட்டது. நமது உடற்செல்கள் ஊட்டப்பொருட்களை உறிஞ்சிக் கொள்வதற்கும் ஜீரண நடவடிக்கைகளை சீராக்குவதற்கும் நீர் மிக முக்கியமானது.

சுவாசிக்கும்போதும் வியர்வை வெளியேறும்போதும் செல்களில் உள்ள நீரின் அளவில் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை ஈடுசெய்ய நாம் தொடர்ச்சியாக நீர் அருந்த வேண்டிய தேவை உள்ளது.

நீர் சருமத்திலுள்ள அழுக்குகள் மாசுக்களை அகற்றி பருக்கள் ஏற்படுவதைத் தடுத்து சருமத்தை மென்மையாக்குகிறது. சருமத்தை ஊட்டமுள்ளதாக வைத்திருக்க நாளொன்றிற்கு கட்டாயமாக 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

3. கொழுப்பு அமிலம்(EFAs):
கொழுப்பு அமிலங்கள் இல்லாவிட்டால் சருமக் கலன்கள் உலர்ந்து கறைகள் படிந்ததாய்க் காணப்படும். ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் சருமத்தைப் பொலிவுறச் செய்கின்றன.

ஒமேகா-6 கொழுப்பு அமிலம் கோழி இறைச்சி, தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றில் அதிகம் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது சிலவகை மீன்கள், சூரியகாந்தி எண்ணெய், கிட்னி பீன்ஸ், வால்நட்ஸ் மற்றும் ஸ்பைனாக் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.

சில சரும நிபுணர்கள் Gamma Linolenic Acid (GLA) இணையும் தற்போது பரிந்துரை செய்து வருகின்றனர்.

இந்த கொழும்பு அமிலமானது தாவர எண்ணெய்யில் அதிகம் காணப்படுகிறது.

4. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு:
சன்ஸ்கீரின்களை நீங்கள் பாவிக்கின்ற பொழுது சருமப் புற்றுநோய்களிலிருந்தும் ஏனைய சரும நோய்களிலிருந்தும் உங்கள் சருமத்தை நீங்கள் பாதுகாப்பதோடு சூரிய ஒளியினால் உங்கள் சருமம் வயதான தோற்றத்தை விரைவில் பெறுவதிலிருந்தும் பாதுகாப்புச் செய்கின்றீர்கள்.

சூரிய ஒளி நேரடியாக சருமத்தைத் தாக்கும்போது நிறமாற்றம், சுருக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகையில் சன்ஸ்கீரின் UV கதிர்களை ஊடுருவ விடாமல் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

5. அன்டியக்சிடன்ட்ஸ் (Antioxidants):
கார்டியோவஸ்குலார் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பிற்கு அன்டியக்சிடன்ட்ஸ் பயன்படக்கூடிய ஒன்றாக நம்பப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், கடல் உணவு மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படுகிறது.

பலதரப்பட்ட அன்டியக்சிடன்ட்ஸ் இருக்கின்ற போதும் இரண்டு வகை மட்டுமே சருமப் பராமரிப்பில் அதிக கவனத்தைப் பெற்றவை.

இயற்கையான பொருட்களை வைத்து வாக்ஸிங் செய்யலாம்

இயற்கையான பொருட்களை வைத்து வாக்ஸிங் செய்யலாம்

உடலில் தேவையில்லாத முடிகளை நீக்க கெமிக்கல் வாக்ஸிங் என்பது ஒரு வழி. அதுமட்டுமே வழியல்ல. இயற்கையான பொருட்களை வைத்தே வாக்ஸிங் செய்யலாம். நாம் பாட்டியும், அம்மாவும் கூட பயன்படுத்திய பொருட்கள்தான் இவை. பெண்களே வீட்டிலிலேயே உங்கள் பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

• கஸ்தூரி மஞ்சள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தாலே முடி வளர்வதை தடுக்கலாம்.

• வேப்பிலை வெந்நீரில் போட்டு குளித்து வந்தாலும் முடி வளர்ச்சி கட்டுக்குள் இருக்கும்.

• வேப்பங்குச்சியை எரித்து அதன் சாம்பலை உடம்பில் பூசி குளித்து வந்தாலும் முடி வளர்வது குறைவாக இருக்கும்.

• கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், கார்போக அரிசி, கோஷ்டம் வேர், விளாமிச்சை வேர், ரோஜா இதழ், செண்பகமொட்டு இவைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து 250 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். இத்துடன் 250 கிராம் பயத்தம் பயிரையும் அரைத்து ஒன்றாய் கலந்து குளியல் பொடியாக தயார் செய்து கொள்ளவும்.

• குளிப்பதற்கு முன்னர் உடலில் எண்ணெய் தடவி கொண்டு பின்னர் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பாத் பவுடரை தேய்த்து குளித்து வந்தால் சரும வறட்சி ஏற்படாது. முடி வளர்ச்சியும் கட்டுப்படும்.

Natural refrigerator - இயற்கை குளிர்சாதனப்பெட்டி

Natural refrigerator - இயற்கை குளிர்சாதனப்பெட்டி


பழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில்வைத்து உபயோகப்படுத்துவது நல்லது அல்ல. பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளியமுறையில் வாடாமல் வைக்கலாம். ஒருஅகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.(அளவு தேவைக்கேற்ப) அதை மணலில்நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிது நீர்தெளித்து மண்ணை ஈரமாக்கவும். ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல்விரிக்கவும். இதற்கு மேல் காய்கறிகளையும்பழங்களையும் வைக்கவும். இது ஓரளவுக்கு பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும். தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும். கீரைகள், க ருவேப்பிலை, கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் 1 நாளைக்கு வாடாமல்இருக்கும். தேவையிருக்கும் பொழுதுவாங்கி உடனே உபயோகிப்பது நல்லது. வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டுவளர்க்கலாம். அலங்கார செடிகள்வளர்ப்பதற்கு
பதிலாக கீரைகள், காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம். மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம்.

பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்

பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்


1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.


2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார*த்தை மிச்ச*ப்ப*டுத்த* உத*வும்.


3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.


4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.


5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.


6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.


7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.


8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.


9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.


10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.


11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.


12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.


13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.


14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.


15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.


16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.


17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.


18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.


19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.


20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

ரோஜா செடியில் பூச்சியா?

ரோஜா செடியில் பூச்சியா?



வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது.10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.

தேர்வு அட்டவணை

பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை


மார்ச் 5 வியாழக்கிழமை தமிழ் முதல் தாள


மார்ச் 6 வெள்ளிக்கிழமை தமிழ் இரண்டாம் தாள்


மார்ச் 9 திங்கள்கிழமை ஆங்கிலம் முதல் தாள்


மார்ச் 10 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்


மார்ச் 13 வெள்ளிக்கிழமை தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்


மார்ச் 16 திங்கள்கிழமை வணிகவியல், மனையியல், புவியியல்


மார்ச் 18 புதன்கிழமை கணிதம், விலங்கியல், மைக்ரோ- பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயடட்டிக்ஸ்


மார்ச் 20 வெள்ளிக்கிழமை அரசியல் அறிவியல்,


நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு


மார்ச் 23 திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்


மார்ச் 27 வெள்ளிக்கிழமை இயற்பியல், பொருளாதாரம்


மார்ச் 31 செவ்வாய்க்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்


பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை


மார்ச் 19 வியாழக்கிழமை தமிழ் முதல் தாள்


மார்ச் 24 செவ்வாய்க்கிழமை தமிழ் இரண்டாம் தாள்


மார்ச் 25 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்


மார்ச் 26 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்


மார்ச் 30 திங்கள்கிழமை கணிதம்


ஏப்ரல் 6 திங்கள்கிழமை அறிவியல்


ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்

உலகின் உயரமான கட்டடத்தில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ

உலகின் உயரமான கட்டடத்தில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ

கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ பிரிவு, அண்மையில், உலகிலேயே மிக உயரமான, 2,717 அடி, கட்டடத்தின் உச்சியில் இருந்து பெறக் கூடிய காட்சி தனைத் தந்துள்ளது. எனவே, மனிதன் ஏற்படுத்திய மிக உயரமான இந்த இடத்தில் இருந்து பார்த்தால், எப்படி காட்சி இருக்கும் என்பதனை, நமக்கு மயக்கம் வராமலேயே தெரிந்து கொள்ளலாம். துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் இந்த கட்டடத்தின் மேலாக, கூகுள் ஸ்ட்ரீட் வியூ குழுவினர், தங்கள் கேமராக்களைக் கொண்டு சென்று, மூன்று நாட்கள், அரிய காட்சிகளைப் பிடித்து பதிந்து வந்துள்ளனர். 


கட்டடத்தின் 124 ஆவது மாடியில் இருந்து காட்சிகள் பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்கட்டடத்தின் பராமரிப்பு தளமான 73 ஆவது மாடியிலிருந்தும் பல அரிய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. 


ஸ்ட்ரீட் வியூவின் ட்ரெக்கர் மூலம், மூன்று நாட்கள் உழைத்து, 360 டிகிரி கோணத்தில் பல காட்சிகள் எடுக்கப்பட்டு கிடைக்கின்றன. கூகுள் ஸ்ட்ரீட் வியூ தொடங்கிய பின்னர், விண்ணைத் தொடும் கட்டடம் ஒன்றிலிருந்து காட்சிகள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். 

பச்சை மிளகாய் குழம்பு

தேவையான பொருட்கள் :


பச்சை மிளகாய் 50 கிராம்

சின்ன வெங்காயம் 50 கிராம்

புளி 50 கிராம்

எண்ணெய் 7 மேசைக் கரண்டி

கடுகு , உளுந்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி

உப்பு சிறிதளவு


செய்முறை :

பச்சை மிளகாயை காம்பு நீக்கிவிட்டு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். புளியையும் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டுத் தாளித்து அத்துடன் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு நன்றாக சிறு தீயில் வதக்கவும்.

வதங்கிய பின்பு புளிக்கரைசலையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் மிதமான தீயில் வைத்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி விடவேண்டும்.

பி.கு. எந்த நேரம் ஆனாலும் எனக்காக செய்து தருவார்கள். பல சமயம் நடு நிசி தாண்டி கூட. இப்போது என்று சந்தித்தாலும் அன்று நிச்சயம் இது மெனுவில் இருக்கும்.

பேரீச்சம்பழ பாயசம்

பேரீச்சம்பழ பாயசம்

தேவையான பொருட்கள்: 
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 1 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
வெல்லம் நறுக்கியது - 1/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:
* கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
* வெல்லத்தை சிறிது தண்*ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.
* ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,
* ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:
* தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப்பாலை உபயோகிக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம்.
* ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதானது வெல்ல சுவையைத் தூக்கிக் காட்டும். வெல்லத்திற்கு பதிலாக தேவைப்பட்டால் சிறிது தேனும் உபயோகிக்கலாம்.
* மற்ற பாயசங்களில் இருந்து வேறுபட்ட சுவையுடன் இயற்கை இனிப்புடனும் கமகம மணத்துடனும் இருக்கும் பேரீச்சம் பழ பாயசம் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது என்றால் சரிதானே!

இலவச சேவை தொலைபேசி எண்கள்(கணினி வடிவமைப்பாளர்கள்)

AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
LG - 1901 180 9999
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Samsung - 1800-110-011
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004

ஆனந்த சுவை பாஸந்தி

தேவையான பொருட்கள்

புல் கிரீம் பால் - 2 லிட்டர்
குங்குமப்பூ - சிறிதளவு
சர்க்கரை - 1/2 கப்

அலங்கரிக்க
நெய் - 1 டீஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
* அடிகனமான வாணலியில் பாலை ஊற்றி மெல்லிய தீயில் அடுப்பை வைத்து பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலந்து அதன் மேலே படியும் ஏடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.
* நடுநடுவே கலந்து, கலந்து பாலின் மேல் படியும் ஏடை, பாலின் அளவு 1/4 லிட்டர் அளவுக்கு குன்றும் வரை எடுத்து பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.
* பிறகு பாத்திரத்தில் சேகரித்த ஏடு, சர்க்கரை சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறவும்.
* நெய்யில் தோலுரித்த பாதாம், முந்திரி, பிஸ்தா வறுத்து பாஸந்தியின் மேல்போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு
* குளிர்காலத்தில் பாஸந்தியை சூடாகவும், வெயில் காலத்தில் பாஸந்தியை குளிர் சாதனப் பெட்டியில் வைத்தெடுத்து சில்லென்றும் பரிமாறலாம்.

மேனியை சிவப்பாக


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள்.