Wednesday, August 26, 2015

ஜி மெயில்


ஜி மெயிலில் அனுப்பிய மெயிலை திரும்பி பெரும் வசதி

1. உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில் நுழையவும். கிடைத்தவுடன், உங்கள் திரையில் வலது மூலையில் மேலாகக் காணப்படும் ஐகான் அருகே செல்லவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், 'Settings' என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. மீண்டும் திரையில் வலது பக்க மூலையில் உள்ள 'Labs' என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

3. இப்போது கிடைக்கும் விண்டோவில், கீழாகச் செல்லவும்.

4. இங்கு “Undo Send” என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். இதனை இயக்கும் வகையில் enable செய்திடவும்.

5. தொடர்ந்து திரையின் கீழாகச் சென்று 'Save Changes' என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி, நீங்கள் ஜிமெயில் தளத்தில், மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், மேலாக, “Your message has been sent” என்பதன் அருகே, Hit 'Undo' to recall your email என்று ஒரு செய்தி கிடைக்கும். 10 விநாடிகளுக்குள், இந்த இடத்தில் கிளிக் செய்தால், அஞ்சல் அனுப்பப்பட மாட்டாது. இந்த கால நேரத்தை அதிகப்படுத்த விரும்பினால், மீண்டும் லேப்ஸ் சென்று அங்கு “Undo Send” ஆப்ஷன்ஸ் பகுதியில், இந்த நேரத்தினை 30 விநாடிகள் வரை நீட்டிக்கலாம்.

ஆரோக்கிய உணவு

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".

ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,



1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டு body mass indexபயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்

உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து

உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது
என்று உங்களுக்கு தெரியுமா???


டயட், உடற்பயிற்சி, உண்ணா நோம்பு என பல வகைகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சி செய்கிறோம். நம் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைவதனால் தான் நமது உடல் எடை குறைகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த கொழுப்பு எப்படி நம் உடலை விட்டு வெளியேறுகிறது என்று எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா??

சமீபத்தில் நடத்தப்பட ஓர் அறிவியல் ஆய்வில், மனித உடலில் இருந்து எந்த வகையில் கொழுப்பு கரைந்து வெளியேறுகிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்....

கொழுப்பு, எனர்ஜியாக மாறி வெளியேறுவது இல்லை பெரும்பாலும் நாம், கொழுப்பு எனர்ஜியாக அல்லது எரிக்கப்பட்டு வெளியேறுகிறது என்று தான் நம்புகிறோம். ஆனால், அவ்வாறான நிகழ்வின் காரணமாக கொழுப்பு வெளியேறுவது இல்லை.

கொழுப்பு எப்படி உருவாகிறது
உண்மையில், உணவாக உட்கொள்ளப்படும் அதிகப்படியான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள். இதில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.

ஆக்ஸிடேஷன் செயல்பாடு
உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகளாக கட்டமைந்து இருக்கும் இந்த ப்ளாக்குகள் உடைந்து வெளியேறுகிறது, இந்த செயல்பாடை ஆக்ஸிடேஷன் என்று கூறுகிறார்கள்.

ட்ரைகிளிசரைடு எப்படி எரிக்கப்படுகிறது
ட்ரைகிளிசரைடு எரிக்கப்படும் செயல்பாட்டில், நிறைய ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை, CO2 மற்றும் H2O-களை கழிவாக தயாரிக்க எடுத்துக்கொள்கிறது.

10 கிலோ எடை குறைக்க
பத்து கிலோ எடையிலான கொழுப்பை எரிக்க, 29 கிலோ ஆக்ஸிஜனை நீங்கள் மூச்சாக உள் இழுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் நடக்கும் கொழுப்பை எரிக்கும் இரசாயன மாற்ற செயல்பாட்டில் 28 கிலோ CO2 மற்றும் 11 கிலோ தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.

CO2-வாக வெளியேறும்
கொழுப்பு எடை குறைப்பு செயல்பாட்டில் 84% கொழுப்பு CO2-வாக தான் வெளியேறுகிறது. இது நுரையீரல் வழியாக வெளியேறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள 16% கொழுப்பு மீதமுள்ள 16% கொழுப்பு உடலில் இருந்து நீராக வெளியேறுகிறது. இந்த ஆய்வின் மூலமாக, உடல் எடை குறிப்பில் முக்கியமாக செயல்படும் உடல் உறுப்பு நுரையீரல் என்று கண்டறிந்துள்ளனர்.

நீராக வெளியேறும் கொழுப்பு உடல் எடை குறைப்பு செயல்பாட்டில், சிறுநீராகவும், வியர்வையாகவும், கண்ணீராகவும், மற்ற உடல் திரவாமாகவும் கொழுப்பு நீர் வடிவில் வெளியேறுகிறது என கண்டறிந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டுள்ளது. ரூபன் மீர்மேன் மற்றும் ஆண்ட்ரூ பிரவுன் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்

ஜாக்கிங் சிறந்த பயிற்சி உடல் எடைக் குறைப்பதற்கு சிறந்த பயிற்சி ஜாக்கிங், ரன்னிங் தான் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த பயிற்சியில் ஈடுபடும் போது தான் நாம் அதிகமாக சுவாசிக்க முடியும், மற்றும் நுரையீரல் நிரம்ப மூச்சை உள்ளிழுத்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.a