Sunday, February 22, 2015

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் மரு‌‌த்துவ‌ம்

குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி ‌பிடி‌த்‌திரு‌ந்தா‌ல் தைல‌ம் தே‌ய்‌‌ப்பா‌ர்க‌ள்.
 
ஆனா‌ல், அதை ‌விட ‌சிற‌ந்த மரு‌ந்து தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் க‌ற்பூர‌ம் தா‌ன். 
 
தேங்காய் எண்ணையை ந‌ன்கு சூடா‌க்‌கி இற‌க்‌கி அ‌தி‌ல் கற்பூரம் சேர்த்து அதனை குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் சூடு தா‌ங்கு‌ம் அள‌வி‌ற்கு ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

வீட்டில் எலி தொல்லையா

எலிகளுக்கு புதினாவின் வாசனை சுத்தமாக பிடிக்காது. வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் புதினா இலைகள் அல்லது புதினாவின் வாசனை உடைய திரவியம் ஆகியவற்றை வைத்தால் எலி தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

குப்பைகளை கொட்டியப்பிறகு குப்பைத்தொட்டிகளை சுத்தமாக கழுவி வையுங்கள். முக்கியமாக, ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும். 

தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். 

வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை உடனடியாக சிமென்ட் அல்லது மண் வைத்து அடைத்து விடுங்கள்.

இப்போது விற்கப்படும் எலிகளுக்கான விஷ மருந்துகளை உண்டப்பின் எலிகள் வீட்டுக்குள்ளேயே இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இவ்வகை மருந்துகளை உபயோகிக்கும் போது கவனம் தேவை.

இவை அனைத்தயும் விட எளிமையானது. வீட்டில் ஆங்காங்கே நாஃப்தலின் (ரசக‌ற்பூர‌ம்) பால்ஸ் வைப்பதுதான். நாஃப்தலின் பால்ஸ் இருப்பது தெரிந்தா‌ல் எலிகள் அப்பக்கமே வராது.

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய எளிய குறிப்புகள்

கிச்சனில் எறும்பு தொல்லையா...?

வீட்டிலும், சமையல் அறையிலும் எறும்புகள் இருந்தால், அவை எங்கிருந்து வருகின்றன என்பதை பார்த்து அங்கு சிறிது petroleum jelly - யை தேய்த்துவிட்டால் எறும்பு தொல்லை இனி இல்லை.

திடீர் வெங்காயச் சட்னி செய்ய...

இட்லிக்குத் தொட்டுக்கொள்ளும் மிளகாய்ப் பொடியுடன் வெங்காயத்தை வெட்டி போட்டு அரைத்தெடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி தயார். சுவையாகவும் இருக்கும்.

ரசம் மணமாக இருக்க...

கொத்துமல்லியை ஆண்டு முழுவதும் பயன்படுத்த ஒரு வழி, கொத்துமல்லித் தழைகள் உபயோகித்த பின் மிஞ்சிய காம்புகளை புளியுடன் சேர்த்து லேசாக இடித்து வெளியில் காய வைத்து எடுத்துவிட வேண்டும்.கொத்துமல்லி கிடைக்காத காலத்தில் இந்தப் புளியை உபயோகித்து ரசம் வைத்தால் ரசம் மணமாக இருக்கும்.

பீட்ரூட், காரட் வேகவைத்த நீர்...

பீட்ரூட், காரட் வேக வைத்து வடிகட்டும் நீரைக் கீழே கொட்டிவிடாமல் சிறிது சீனியைப் போட்டு ஆறிய பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அந்தக் கிழங்குகளை உண்பதைவிட, நீரைக் குடிப்பதன் மூலம் சத்து அதிகமாகக் கிடைக்கும். சுவையாகவும் இருக்கும். அனைவரும் அருந்தலாம்.

பூசனம் பற்றுவதைத் தடுக்க...

எவ்வளவு பக்குவமாக மாவடு தயாரித்தாலும் பூசனம் பற்றுவதைத் தடுக்க முடிவதில்லை. இதற்கு, வடுமாங்காய் தயாரித்த ஒரு வாரம் கழித்து, அந்த நீரை மட்டும் இறுத்துக் கல் சட்டியில் விட்டு முக்கால் பாகமாகச் சுண்டக் காய்ச்சி ஜாடியில் விட்டு அதில் ஊறிய வடுக்களைப் போட்டு வைத்தால் பூசனம் பிடிப்பதைத் தடுக்கலாம்.

பூண்டு சுலபமாக வேக...

பூண்டை தனித்தனிப் பல்லாகப் பிரித்தெடுத்து வாணலியில் நன்கு வதக்கியபின் உரித்தால் சுலபமாக உரிக்கலாம். பிறகு புளியில் போட்டால் விறைத்துக் கொண்டு சுலவமாக வெந்துவிடும்.

மீன்தொட்டியை கிளீன் செய்த பிறகு, அந்த தண்ணீரை என்ன செய்றீங்க....

வெங்காயம், பூண்டின் தோல் உரித்தப்பின் கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனில் கைகளை நன்றாக தடவுங்கள்.

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா, அவை எந்த வழியாக வருகின்றன என்பதை பார்த்து, அங்கு பெட்ரோலியம் ஜெல்லியை பூசிவிடுங்கள் 

மீன் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்து வேறு நீர் மாற்றும் போது, பழைய நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றலாம்.

மருத்துவக் குறிப்புகள் 6


51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

மருத்துவக் குறிப்புகள் 5


41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

புதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய்

கண்ணேறு கழித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே கடைபிடிக்கப்படும் மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்பதை இன்றைய விஞ்ஞான உலகமும் ஒப்புக் கொண்டிருக்கின்றது. இதனை நம் முன்னோர்கள் திருஷ்டி தோஷம் எனக் குறிப்பிட்டார்கள். இவ்வளவு அழகாக வீடுகட்டி விட்டார்களே என்று பொறாமையுடன் யாராவது பார்த்தால், இந்த திருஷ்டி தோஷம் ஏற்படும். இதனால் நமக்கும் பாதிப்புகள் வராமல் இருக்க பூசணிக்காய் தொங்கவிடுவர். புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டிதோஷம் குறையும் என்றனர்.

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை


20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். பாலூட்டி இனங்களில் உள்ள 'சிர்ட்6' (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர்.


எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது.

இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ முடியும் என கணித்துள்ளனர். அதற்கான ஆய்வு மனிதர்களிடம் விரைவில் நடைபெற உள்ளது.

கம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் உழைக்க சில வழிகள்

கம்ப்யூட்டரில் சிக்கல் வருவதற்கு முன்பே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளின் மூலம் சிக்கல்கள் நேராதவாறு பராமரிக்கலாம். 
கம்ப்யூட்டர்களை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யுங்கள் 
வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வதால் ஹார்டு டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது 
அப்டேட்களுடன் கூடிய ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள் 
எந்த வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம். 
சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருள்களே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகின்றன. 
ஃபயர்வால் இன்ஸ்டால் செய்யுங்கள் 
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால், ஃபயர்வால் இயக்குவது மிகவும் அவசியம். அதிகாரப்பூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். .இந்த வசதியை, Start=> programs=> accessories=> Systemtools=> Security center சென்று இயக்கலாம். 
டீஃப்ராக் செய்யவும் 
டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை ஒழுங்கமைக்கும் செயல்பாடு. அதாவது, நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் . இதனால் கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிப்பதோடு, தேவையற்றவை தவிர்க்கப்படும். நம் இயக்கத்துக்கு தகுந்தாற்போல் இந்த வசதியை இயக்கலாம். 
டிஸ்க்கை சுத்தம் செய்யுங்கள் 
உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனைத் துரிதப்படுத்த, டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் மீதங்களையும் இது முற்றிலும் நீக்கிவிடும். 
இணையதள டவுன்லோடுகளை குறையுங்கள் 
இணையதளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். குறிப்பாக அதிகாரபூர்வமற்ற இசை இணைய தளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவற்றிலெல்லாம் கம்ப்யூட்டரை இயங்க விடாமல் செய்யும் திங்கிழைக்கும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம். 
பயன்படுத்தாத புரோகிராம் களை ரத்து செய்யுங்கள் 
இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது, கன்ட்ரோல் பேனலில் உள்ள Add/remove programs பயன்படுத்தி அதனை நீக்கி விடுங்கள். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கம்ப்யூட்டரின் செயல்திறன் அதிகரிக்கும். 
கம்ப்யூட்டரை சுத்தம் செய்யுங்கள் 
கம்ப்யூட்டரின் உட்பகுதிகளில் தூசு தங்கி விடாமல் இருக்க, வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசுகளை அகற்றுங்கள். 
நண்பர்களே இப்படி நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பயன்படும். 
நன்றி: தமிழ் எண்மியம்

அழகுக் கலையில் செய்யக் கூடாதவை

*தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும்.

*எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஜூஸ் எடுத்து, முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள் என்று சில அழகுக் குறிப்புகளில் சொல்லப்படுகிறது. ஆனால், எலுமிச்சம் பழத்தோல் அல்லது ஜூசை முகத்தில் அப்படியே தடவக் கூடாது; தோல் அலர்ஜியாகி விடும். பால் அல்லது பேஸ் பேக்குடன் கலந்து தான் உபயோகிக்க வேண்டும்.

*பரு இருப்பவர்கள் முகத்தை மசாஜ் செய்யக் கூடாது; பரு காய்ந்து விட்டதா என்று கிள்ளிப் பார்க்கவும் கூடாது.

*எண்ணெய் பசை தோலுள்ளவர்கள், முகத்தை சுத்தப்படுத்த சோப்புக்கு பதில் தயிர் உபயோகிக்க கூடாது. மோர் அல்லது பால், எலுமிச்சை சாறு அல்லது பேஸ் வாஷ் கொண்டே முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

*இவர்கள் முகத்துக்கு உபயோகிக்கும் பவுண்டேஷனை நீண்ட நேரம் பூசிக் கொண்டிருக்கக் கூடாது. பருக்கள் மற்றும் கரும்புள்ளி வந்து விடும்.

*முகத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டி வைக்கவே கூடாது. அப்படி செய்தால், மிக மெல்லிய மேல்புறம் பாதிக்கப்படும். ஐஸ் கட்டியை பஞ்சு அல்லது துணிக்குள் வைத்து, முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அதேபோல், அதிக சூடான வெந்நீரிலும் முகம் கழுவக் கூடாது.

*புருவத்துக்கு மையிடும் ஐ-புரோ பென்சிலை வைத்து கண்ணுக்குள் மையிடக் கூடாது.

*வறண்ட தோல் கொண்டவர்கள், வெள்ளரி துருவல் அல்லது ஜூசை அப்படியே முகத்தில் பூசக் கூடாது; பேஸ் பேக் எதனுடனாவது கலந்துதான் பூச வேண்டும். இவர்கள், அப்படியே உபயோகிக்காமல் புதினா விழுது, முல்தானி மட்டியுடன் கலந்து உபயோகிக்கலாம்.

*டூவீலரில் செல்லும் போது முடியை அப்படியே பறக்க விடக் கூடாது. அழுக்கு சேர்ந்து முடி கொட்ட ஆரம்பித்து விடும். காட்டன் துணியால் தலையை சுற்றி கட்டிக் கொள்ளலாம்.

*தலைமுடி ஈரமாக இருக்கும் போது வாராதீர்கள்; முடி உடைந்து விடும்.

*முகம் கழுவியபின், டவலால் முகத்தை இழுத்துத் துடைக்காதீர்கள்; ஒற்றி எடுப்பதே உத்தமம்.

*இரவில் உபயோகிக்கும் நைட் கிரீமும், மாய்ச்சுரைசரும் கூட கண்ணைச் சுற்றி பூசக் கூடாது. இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகளுக்கான துளைகள் கிடையாது. அதனால், கண்ணைச் சுற்றிலும் உப்பிப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

*கொதிக்க, கொதிக்க வெந்நீரில் குளிக்கக் கூடாது. உடலில் அத்தனை வியர்வை துளைகளும் திறந்து கொண்டு விடும். நாள் முழுக்க வியர்வை கொட்டும் அழுக்குகள் சுலபமாக அந்த துவாரங்களில் தங்கி அடைத்துக் கொண்டு விடும். முகத்தில் கரும்புள்ளிகளும் வரும், வெந்நீரில் குளித்தால், கடைசியாக உடல் முழுக்க படும்படி இரண்டு குவளை பச்சைத் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

*அக்குளில் பவுடர் போடக் கூடாது. முக்கியமான வியர்வை சுரப்பிகள் அங்கே இருக்கின்றன. பவுடர் இந்த வியர்வைத் துளைகளை மூடி விடுவதால், வியர்வை வெளிவர முடியாமல், துர்நாற்றம் வீசும்.

*எண்ணெய் பசை தோலுள்ளவர்கள் ஐஸ்கிரீம், எண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

*அழகுக்கு முக்கிய எதிரி மலச்சிக்கல்; இது, தோலின் பொலிவை பாதிக்கும். வாய் நாற்றம் ஏற்படும். தினசரி ஏதாவது ஒரு கீரை, பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும்.

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்


உங்கள் கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்‌ஸ்ச்சரைசரை பயன்படுத்தவும்.

உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நனைத்து அதனை கண் இமையின் மீது வைத்துக் கொள்ளவும்.

கண்களின் கரு வளையங்களை போக்க உருளைக் கிழங்கை நறுக்கி கண்களின் மீது தினமும் வைத்து வரவும்.

புருவங்களை திருத்திக் கொள்ள டூத் பிரஷ்ஷை பயன் படுத்தினால் அட்டகாசமாக இருக்கும்.

சருமத்தின் சுருக்கத்தை மறைக்க அங்கு மெஹந்தி இட்டு மறைக்கலாம. அல்லது வைட்டமின் இ ஆயிலை தடவி மங்கச் செய்யலாம்.

நகம் வெட்டும் போது ஓரங்களை வெட்டினால் நகத்தை அது பலமிழக்கச் செய்யும்.

நகக் கணுக்கள் வறண்டு போகாமல் இருக்க வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

நகத்தில் உள்ள வெள்ளைப் பொட்டுகளை நீக்க துத்தநாகம் கலந்த மருந்தை எடுத்துக்கொள்ளவும்.

கால்களை நன்றாக அழகாக வைத்துக் கொள்ள கா‌ல்க‌ளி‌ல் நல்ல எண்ணெய் தேய்த்து பிறகு கால்களை‌க் கழுவவு‌ம்.

கால்களை நீங்களாகவே நன்றாக மசாஜ் செய்யுங்கள் இளமையுடன் உங்கள் கால்கள் இருக்க இதுவே சிறந்த வழி.

உள்ளங்கால்கள் கடுமையாக வறண்டு இருந்தால் சூடான மெழுகு திரவம் கொண்டு தடவவும.

உங்கள் கால்கள் மிருதுவாகவும் அழகாகவும் இருக்க உங்கள் குளியலில் பாலைச் சிறிதளவு சேர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வாழைக்காய் கட்லெட்

தேவையானவை

வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப்,
பிரெட் ஸ்லைஸ் – 4,
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்,
பொடித்த அவல் – 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

சிறிதளவு தண்ணீரில் பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி!

வாழைக்காயை அளவோடு சாப்பிடுவது நல்லது!


இன்றைக்கு மருத்துவத்திலும் வாழை பெரும்பாலான ஆராய்ச்சிகளில் பயன்படுகிறது வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் நாம் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மற்ற வாழைக்காய்களையும் சாப்பிடலாம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது.
மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம்.
நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.
வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், கழிச்சல், இருமல் போன்றவையும் நீங்கும். ஆனால் வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாய்வு மிகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.
வாழைப்பிஞ்சுகளை பத்தியத்திற்கு சாப்பிடலாம் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன ஸ்லைஸ்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம் இதோ சில ஐடியாக்கள்

* பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.
* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.
* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.
* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.
* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.

* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.
* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.
* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.
* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

கேரட் அல்வா

தேவையான பொருள்கள்

கேரட் துருவல் - 1/4 கிலோ
பால் - ஒரு லிட்டர்
நெய் - 50 கிராம்
சர்க்கரை - 1/4 கிலோ
ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் – சிறிதளவு

செய்முறை
கேரட் துருவல் எடுத்துக் கொள்ளவும்.
பாலை அரை லிட்டராக குறுக்கிக் காய்ச்சவும்.
பின் குக்கரில் பால், கேரட் துருவல் இரண்டையும் 2 விசில் வேக விடவும்.
பின்பு அத்துடன் நெய், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி நெய், சர்க்கரை கேரட் ஒன்று சேர்ந்ததும் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் போட்டு இறக்கவும்.

கோதுமை மாவு புட்டு

தேவையான பொருட்கள் ;
தரமான கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - முக்கால் கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - பாதி தேங்காயில்

மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.தண்ணீர்,உப்பு போட்டு கையால் உதிரியாக கிளறவும்.கால் மணி நேரம் வைக்கவும்.மிக்ஸி பெரிய ஜாரில் இரண்டு முறையாக பல்ஸில் 4 சுற்று போட்டு உதிரியாக எடுக்கவும்.அதனுடன் தேங்காய்ப்பூ சேர்த்து மிக்ஸ் செய்யவும்.புட்டுகுழலில் சிறிது நெய் தடவி மாவை முக்கால் அளவு போட்டு மூடவும்.அதனை அவித்து மணம் வரவும்,(சுமார் 5 -10 நிமிடம்) கழித்து எடுக்கவும்.

சுவையான கோதுமை மாவு புட்டு ரெடி.இதனை பச்சைபயறு கறியுடன் அல்லது கடலை கறியுடன் பரிமாறலாம்,வாழைப்பழம் பால்,சீனி போட்டும் சாப்பிடலாம்.ஆரோக்கியமான உணவாகும்.பக்குவமாக மாவை விரவி அவித்து எடுப்பதில் தான் அதன் சுவையே இருக்கிறது.