Tuesday, February 17, 2015

ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரை


ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரை

என்னென்ன தேவை?

உதிராக வடித்த பச்சரிசி சாதம் 4 கப்
நல்லெண்ணெய் 2 கப்
கெட்டியாக கரைத்த புளிக்கரைசல் 3 கப்
மஞ்சள் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கட்டி பெருங்காயம் 20 கிராம்
கறிவேப்பிலை சிறிது
மிளகாய் வற்றல் 2 கப்
கருப்பு எள் ஒரு கப்
தனியா ஒரு கப்
வெந்தயம் அரை கப்
நிலக்கடலை கால் கப்
உளுத்தம் பருப்பு கால் கப்
கடலைப் பருப்பு கால் கப்
கடுகு 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

சாதத்தை உதிர்த்து சிறிது எண்ணெயும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து பிசறி வைக்கவும். மிளகாய் வற்றல், கருப்பு எள், தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனியே வறுத்து இடிக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில் பொரித் துப் பொடித்து புளிக்கரைசலில் கலக்கவும்.

அடி கனமான கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளிக்கரைசலை விட்டு கொதிக்க வைக்கவும். இன்னொரு கடாயில் மீதி எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சில மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொதிக்கும் புளியில் கொட்டவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும்.

இன்னும் கெட்டிப்பட்டு எண்ணெய் வெளிவர ஆரம்பித்ததும், அடுப்பை அணைக்கவும். பொடித்த பொடிகளை ஒன்றாகக் கலந்து புளிக்கரைசலின் மேல் கொட்டவும் நன்கு கிளறி சாதத்தில் தேவையான அளவு விட்டு கலக்கவும். உப்பு சிறிது சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment