Thursday, January 8, 2015

வாரணம்

தமிழில், 170க்கும் மேற்பட்டப் பெயர்கள் உள்ளன.
  1. யானை
  2. வேழம்
  3. களிறு -ஆண்யானை
  4. மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
  5. பிடி - பெண்யானை
  6. கரி
  7. வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
  8. அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
  9. அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
  10. அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
  11. சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
  12. புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
  13. வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
  14. புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
  15. அத்தி - (பிங்கல நிகண்டு)
  16. அத்தினி
  17. அதவை - போர் யானை
  18. அரசுவா
  19. அல்லியன்
  20. அனுபமை
  21. ஆம்பல்
  22. ஆனை
  23. இபம் - திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
  24. இரதி
  25. இராசகுஞ்சரம் / குஞ்சரம்
  26. இருள்
  27. தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
  28. வல்விலங்கு
  29. மாதங்கம்
  30. உம்பல் - சான்று
  31. உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)
  32. கலபம்
  33. அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)
  34. அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை
  35. உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை
  36. எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)
  37. ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை
  38. ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.
  39. கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.
  40. கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.
  41. ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)
  42. கசேந்திரன் - சிறந்த யானை.
  43. குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.
  44. கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)
  45. ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.
  46. ஓங்கல் - யானை. (அக. நி.)
  47. கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)
  48. கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)
  49. கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).
  50. கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)
  51. கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)
  52. கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)
  53. கருமா -
  54. கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )
  55. கள்வன் - பிங்கல நிகண்டு
  56. களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)
  57. கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)
  58. கஜம் = கெசம்
  59. காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)
  60. கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)
  61. கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)
  62. குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)
  63. கும்பி - (திவாகர நிகண்டு)
  64. குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)
  65. குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).
  66. கைம்மலை - கையை உடைய மலை(அக. நி.)
  67. நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)
  68. கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).
  69. கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)
  70. சத்திரி - யானை. (சங். அக.)
  71. சாகசம் - யானை. (அக. நி.)
  72. சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)
  73. சிந்துரம் - (சூடா.)
  74. சுண்டாலம் - (யாழ். அக.)
  75. சூகை - (அக.நிக)
  76. தந்தாயுதம்
  77. தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).
  78. தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.
  79. தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.
  80. தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை
  81. தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)
  82. திண்டி - (அக.நிக)
  83. தீர்க்கமாருதம் - (யாழ். அக.)
  84. தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)
  85. தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)
  86. துருமாரி - (யாழ். அக.)
  87. துவரிதழ் - (அக.நிக)
  88. துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)
  89. தூங்கல் - (திவாகர நிகண்டு)
  90. தெட்டி - (அக.நிக)
  91. தெள்ளி - (அக.நிக)
  92. நகரகாதம் - (யாழ்.நிக)
  93. நகரசம் - (யாழ்.நிக)
  94. நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)
  95. நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)
  96. நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.
  97. நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)
  98. நூ - (அக.நிக)
  99. நூழில் (சூடாமணி நிகண்டு)
  100. நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
  101. பகடு - பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5)
  102. பஞ்சநகாயுதம்
  103. பஞ்சநகம்
  104. பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
  105. பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
  106. பண்டி (அக.நி.)
  107. பவளக்கொம்பன்
  108. பிக்கம்யானைக்கன்று (யாழ். அக.)
  109. பிணிமுகம்
  110. பிரளயம்
  111. பிள்ளுவம்
  112. பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை
  113. புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)
  114. பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)
  115. புழைக்கை - (திவாகர நிகண்டு)
  116. பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).
  117. பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).
  118. பெருமா - (பிங்கல நிகண்டு)
  119. பென்னை - (சங். அக.)
  120. பேசகி - (சங். அக.)
  121. பேசிலம் - (யாழ். அக.)
  122. பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)
  123. போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)
  124. மகாகாயம் - (யாழ். அக.)
  125. மகாதந்தம் - (யாழ். அக.)
  126. மகாநாதம் - (யாழ். அக.)
  127. மகாமிருகம் - (யாழ். அக.)
  128. மத்தகுணம் - (யாழ். அக.)
  129. மதங்கம் - (யாழ். அக.)
  130. மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)
  131. மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)
  132. மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).
  133. மதமா - (பிங்கல நிகண்டு)
  134. மதவிருந்தம் - (யாழ். அக.)
  135. மதாரம் - (யாழ். அக.)
  136. மதாவளம் - (பிங்கல நிகண்டு)
  137. மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)
  138. மந்தமா - (சூடாமணி நிகண்டு)
  139. மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)
  140. மருண்மா - (திவாகர நிகண்டு)
  141. மறமலி - (திவாகர நிகண்டு)
  142. மா - (அக.நி.)
  143. மாதிரம் - (பிங்கல நிகண்டு)
  144. முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.
  145. மையன்மா - (இலக். அக.)
  146. மொய் - (பிங்கல நிகண்டு)
  147. யாளி - (அக.நி.)
  148. யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)
  149. யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)
  150. யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)
  151. வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)
  152. வராங்கம் - (யாழ். அக.)
  153. வருணம் - (யாழ். அக.)
  154. வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)
  155. வழுவை - (சூடாமணி நிகண்டு)
  156. வியாளம் - கெட்டகுணமுள்ள யானை
  157. விராணி - (சங். அக.)
  158. வேதண்டம் - (பொதி. நி.)
  159. அருணம் - (அக. நி.)
  160. அழுவை - (அக. நி.)
  161. அறுகு - ((பொதி. நி.)
  162. இமழி - (அக. நி.)
  163. உத்தரி - (அக. நி.)
  164. ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)
  165. ஏரம்பம் - (நாமதீப.)
  166. ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)
  167. கரமை - (சங். அக.)
  168. களம் - கொம்பில்லா யானை
  169. கேழல் - (அக. நி.)
  170. சூர்ப்பகன்னம் - (அக. நி.)

No comments:

Post a Comment