Wednesday, February 18, 2015

அறிவியல் பாகம் 1

1. ஆற்றின் ஒரு கரையில் இருந்து ஒலி எழுப்பினால் அது மறு கரையில் இரு முறை ஒலி ஏற்படுத்துவது ஏன்?

நீர் ஓர் ஒலி கடத்தி, காற்றைவிட வேகமாக ஒலியைக் கடத்தும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு கரையில் எழுப்படுகிற ஒலி மறு கரையில் நீ¡¢ன் மூலமாக முதலாவதாகவும் காற்றின் மூலமாக இரண்டாவதாகவும் ஒலிக்கிறது.

2. தண்ணீரை விட அதன் நுரை வெண்மையாகத் தொ¢வது ஏன்?

தண்ணீ¡¢ன் மேல் விழும் ஒளிக் கதிர்கள் நீ¡¢ல் ஊடுருவி உள்ளே சென்றுவிடும். ஆனால் நீ¡¢ன் நுரை மீது விழும் ஒளிக்கதிர் பிரதிபலிக்கிறது. எனவே நீ¡¢ன் நுரை வெண்மையாகத் தொ¢கிறது.

3. மனித உடலில் உள்ள இரத்தத்தின் வகைகள் யாவை?

இரத்தத்தை நான்கு வகைகளாகப் பி¡¢த்துள்ளனர். அவை A, B, AB, O என்பனவாகும்.

4. நமது எடையில் இரத்தத்தின் எடை என்ன விகிதத்தில் உள்ளது?

நமது உடலின் எடையில் இரத்தத்தின் எடை 9% ஆகும்.

5. நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஜேம்ஸ்வாட் என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தார்.

6. பருமனான கம்பி அல்லது மெல்லிய கம்பி இவற்றில் அதிக சுருதியை ஏற்படுத்த எந்த வகைக் கம்பி பயன்படுத்தப் படவேண்டும்?

மெல்லிய கம்பி பயன்படுத்தப்பட வேண்டும்.

7. சுரமானி என்றால் என்ன?

இழுத்துக் கட்டப்பட்டுள்ள கம்பிகளின் அதிர்வுகளைக் கண்டறியப் பயன்படும் கருவி சுரமானி என்பதாகும்.

8. தண்ணீ¡¢ல் மூழ்கும் இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதப்பது ஏன்?

தண்ணீ¡¢ன் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைக் காட்டிலும் குறைவு. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.

பாதரசத்தின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைவிட அதிகம். எனவே பாதரசத்தில் இரும்புக் குண்டு மிதக்கிறது.

9. மிக விரைவில் ஆவியாகும் திரவம் எது?

ஆல்கஹால்

10. மனித உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206

No comments:

Post a Comment