1) வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.
2) முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.
3) ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள். எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.
4) கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
5) தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
No comments:
Post a Comment